Salaar on TamilRockers: சலார் படக்குழுவுக்கு அதிர்ச்சி தந்த தமிழ் ராக்கர்ஸ்: இணையத்தில் லீக்கானது..!
பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட சலார் திரைப்படம், வெளியான சில மணிநேரங்களில் தமிழ் ராக்கர்ஸ் இணையத்திலும் வெளியாகியது. இது படக்குழுவுக்கு அதிர்ச்சியை தரும் வகையில் அமைந்துள்ளது.
டிசம்பர் 22, சென்னை (Chennai): பிரசாந்த் நீல் இயக்கத்தில், ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில், ரவி பஸ்ரூர் இசையில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் சலார் (Salaar: Part 1 – Ceasefire). கே.ஜி.எப் படத்தின் முதல் இரண்டு பாகங்கள் அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து, பிரசாந்த் நீல் தனது பிரம்மாண்டமான அடுத்த படைப்பை தனது ரசிகர்களுக்கு வழங்கி இருக்கிறார்.
மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான சலார்: அதேபோல, பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகத்தின் வெற்றிக்கு பின்னர் வெளியான படங்கள் எதிர்பார்த்த அளவு பிரபாஸுக்கு கைகொடுக்காத நிலையில், அவர் பிரசாந்த் நீலுடன் இணைந்து சலார் படத்தில் பணியாற்றி இருக்கிறார். இதனால் ஏற்கனவே படத்தின் வெளியீடு என்பது ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு இருந்தது.
கொண்டாட்டத்தில் ரசிகர்கள்: இன்று சலார் திரைப்படம் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உலகளவில் வெளியானது. தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் கொண்டாட்டத்துக்கு மத்தியில் ரசிகர்களால் படம் வரவேற்கப்பட்டது. Sudan Girls Ask Abortion Pill: சிறுமிகள் உட்பட 8 ஆயிரம் பெண்கள் கற்பழிப்பு; கர்ப்பத்தை தவிர்க்க கருத்தடை மாத்திரை கேட்கும் சூடான் மக்கள்.! வாழ்விடம் தேடி புலம்பெயரும் பரிதாபம்.!

படக்குழு: இப்படத்தில் நடிகர்கள் பிரபாஸ், பிரித்விராஜ் சுகுமாரன், ஜெகபதி பாபு, மீனாக்ஷி சௌதாரி, சுருதி ஹாசன், ஈஸ்வரி ராவ், ஸ்ரீயா ரெட்டி, ராமச்சந்திரா ராஜு உட்பட பலரும் நடித்துள்ளனர். படம் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுள்ளது. ரூ.350 கோடி செலவில் உருவாகியுள்ளது.
அதிர்ச்சி தந்த தமிழ் ராக்கர்ஸ்: இந்நிலையில், சலார் படத்தின் ஹிந்தி பதிப்பு, திருட்டுத்தனமாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இது படக்குழுவினருக்கு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இப்படத்தின் பிற மொழிகளில் வெளியான காட்சிகளும் விரைவில் இணையத்தில் பதிவு செய்யப்படலாம் என தெரியவருகிறது.
(The above story first appeared on LatestLY on Dec 22, 2023 11:37 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

