Lal Salaam Rajinikanth: "மொய்தீன்பாய் ஆட்டம் ஆரம்பம்" லால் ஸலாம் படத்தில் ரஜினியின் அசத்தல் லுக் வெளியீடு.. கொண்டாடும் ரசிகர்கள்.!
லால் ஸலாம் படத்தில் தந்தைக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுத்துள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அதுகுறித்த போட்டோவை வெளியிட்டுள்ளது வைரலாகியுள்ளது.
மே 08, சென்னை (Cinema News): தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரம், இந்திய திரையுலகின் அடையாளம், தமிழக மக்களால் இன்று வரை தலைவா, சூப்பர்ஸ்டார் என்று பல பட்டங்களுடன் அழைக்கப்பட்டு வரும் நட்சத்திர நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth). இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் பட்டிதொட்டியெங்கும் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் (Jailer) திரைப்படம் ஆகஸ்ட் மாதம் திரையில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார், சன் பிக்சர்ஸ் (Sun Pictures) குழுமம் தயாரித்து வழங்கியுள்ளது. இப்படத்தை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் அவரின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் (Aishwarya Rajinikanth) இயக்கும் லால் ஸலாம் (Lal Salaam) என்ற படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். GJ Vs LSG: இலக்கை நெருங்க போராடி தோற்ற லக்னோ ஜெயிண்ட்ஸ்.. வெளுத்து வாங்கிய குஜராத் சிங்கங்கள்..! மாஸ் வெற்றி அடைந்த குஜராத் டைட்டன்ஸ் அணி.!
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் லால் ஸலாம் படத்தில் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் நாயகனாக விஷ்ணு விஷால் நடிக்கிறார். ரஜினிகாந்தின் கதாபாத்திரம் தொடர்பான புகைப்படமும் படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. ரஜினியின் ரசிகர்கள் எதிர்பார்த்த ஒரு மாஸ் கேரக்டரில் ரஜினி நடிக்கலாம் என்று திரையுலக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
Everyone’s favourite BHAI is back in Mumbai 📍 Make way for #Thalaivar 😎 SuperStar 🌟 #Rajinikanth as #MoideenBhai in #LalSalaam 🫡
இன்று முதல் #மொய்தீன்பாய் ஆட்டம் ஆரம்பம்…! 💥
🌟 @rajinikanth @TheVishnuVishal & @vikranth_offl
— Lyca Productions (@LycaProductions) May 7, 2023
(The above story first appeared on LatestLY on May 08, 2023 08:49 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

