Tourist Family Official Trailer: சசிகுமாரின் டூரிஸ்ட் பேமிலி பட ட்ரைலர்.. இடுப்பழகி டூ குடும்பத்தலைவி.. சிம்ரன் அசத்தல்..!

இலங்கை தமிழர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தின் ட்ரைலர் காட்சிகள் வெளியாகியுள்ளது.

Tourist Family Trailer (Photo Credit: YouTube)

ஏப்ரல் 23, சென்னை (Cinema News): அபிஷன் ஜீவிநாத் இயக்கத்தில், நடிகர்கள் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம்.எஸ் பாஸ்கர், ரமேஷ் திலக், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உட்பட பலர் நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் டூரிஸ்ட் பேமிலி (Tourist Family). எம்.ஆர்.பி என்டர்டைன்மெண்ட், மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து வழங்கும் இப்படம் இலங்கையில் இருந்து தமிழகம் வரும் குடும்பத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. Actress Pavithra Lakshmi: நடிகை பவித்ரா லட்சுமிக்கு என்ன ஆச்சு? அவரே வெளியிட்ட தகவல்.. இப்படி ஒரு சோகமா? ரசிகர்கள் வேதனை..!

இலங்கை தமிழரின் வாழ்வியல் படம்:

சீயோன் ரோல்டன் இசையில், அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவில், பாரத் விக்ரமன் எடிட்டிங்கில் படம் உருவாகியுள்ளது. இஞ்சி இடுப்பழகி என ரசிகர்களால் வருணிக்கப்பட்ட நடிகை சிம்ரன் படத்தில் சசிகுமாரின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். காமெடி, கண்ணீர், திரில்லர் காட்சிகள் நிறைந்த இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது. இதனை முன்னிட்டு படத்தின் ட்ரைலர் காட்சிகள் வெளியாகியுள்ளன.

டூரிஸ்ட் பேமிலி தமிழ் ட்ரைலர் (Tourist Family Tamil Trailer):

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement