நவம்பர் 29, கோவா (Cinema News): கோவாவில் நடைபெற்று வந்த 56வது சர்வதேச திரைப்பட விழா (IFFI) நேற்று (நவம்பர் 28) நிறைவடைந்தது. விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் முன்னணி திரைத்துறைக்கான சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. இதில், இந்திய திரையுலகின் ஐகானாக விளங்கும் நடிகர் ரஜினிகாந்த், கடந்த 50 ஆண்டுகளாக சினிமாவுக்கு ஆற்றிய மிகப்பெரிய பங்களிப்புக்காக வாழ்நாள் சாதனையாளர் (Lifetime Achievement) விருதால் கௌரவிக்கப்பட்டார். பிரபல நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்.!
திரையுலக பயணத்திற்கான அங்கீகாரம்:
ரஜினிகாந்தின் சாதனைகள், ரசிகர்களிடையே பெற்றிருக்கும் வரலாற்றுச் சிறப்பான நிலை, இந்திய சினிமாவை உலக அரங்கில் உயர்த்திய பங்குகளைப் பாராட்டும் விதமாக இந்த சிறப்பு விருது வழங்கப்பட்டது. திரை உலகின் பல பிரபலங்களும், தேசிய மற்றும் சர்வதேச திரைப்பட நிபுணர்களும் இதனை பாராட்டி மகிழ்ந்திருந்தனர்.
‘இன்னும் பிறந்தாலும் நடிகராகவே பிறவேன்’
விருது பெற்றபின் பேசிய ரஜினிகாந்த், தன்னை கௌரவித்த மத்திய அரசு மற்றும் கோவா அரசுக்கு நன்றி தெரிவித்தார். சினிமாவில் தனது 50 ஆண்டு பயணம் அதிவேகத்தில் கடந்ததாகவும், நடிப்பதை இன்னும் அன்போடு தொடர்கிறேன் என்றும் கூறினார். “எனக்கு ஆதரவாக இருந்த தமிழக மக்கள், திரைத்துறையினர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களே எனக்கு முதன்மை சக்தி” என அவர் மனமார்ந்த நன்றியை தெரிவித்தார். “எத்தனை பிறவி எடுத்தாலும் நடிகராகவே பிறக்க விரும்புகிறேன்” என்றும் உணர்ச்சிப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
விருது வழங்கி கௌரவிக்கும் முன்:
What an Aura🥵🧨
When everyone gave a standing ovation & cheering up for superstar #Rajinikanth while he was honoured for 50 Years of Journey♥️🔥 pic.twitter.com/wiCTzDUfPp
— AmuthaBharathi (@CinemaWithAB) November 29, 2025