Chithha on HotStar: மக்களின் பேராதரவைப்பெற்ற, சித்தா திரைப்படம் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் தேதி அறிவிப்பு..!
சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சித்தா திரைப்படம், இன்னும் 7 நாட்களில் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியகிறது.
நவம்பர் 21, சென்னை (Cinema News): நடிகர் சித்தார்த் (Siddharth), நிமிஷா சஜயன் (Nimisha Sajayan), அஞ்சலி நாயர் (Anjali Nair), சஹஸ்ர ஸ்ரீ உட்பட பலர் நடித்து, கடந்த 28 செப்டம்பர் 2023 அன்று வெளியான திரைப்படம் சித்தா (Chithha).
ரூ.4 கோடி பட்ஜெட்டில் தயாரான திரைப்படம், ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால், வசூலும் அதிகரித்தது. Emmy Awards Received by Ekta: எம்மி விருதை பெற்ற முதல் பெண் தயாரிப்பாளர்: இந்தியாவுக்கே கெளரவம்.! விபரம் இதோ.!
இதனையடுத்து, ரூ.4 கோடி செலவில் தயாரான திரைப்படம், தற்போது வரை பாக்ஸ் ஆபிசில் மட்டும் ரூ.16 கோடி அளவு வசூல் செய்துள்ளது. படத்தை எஸ்.யு அருண் குமார் (S.U. Arun Kumar) இயக்கி வழங்கியிருந்தார்.
இந்நிலையில், இப்படம் வரும் நவம்பர் 28ம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. சித்தா படத்தை இனி ஹாட்ஸட்டரில் (Disney HotStar) ஸ்மார்ட்போன், தொலைக்காட்சி வாயிலாகவும் கண்டு மகிழலாம்.
(The above story first appeared on LatestLY on Nov 21, 2023 12:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

