Kanguva Surya 6 Pack: கங்குவா படத்திற்காக ஓயாது உழைக்கும் நடிகர் சூர்யா; மிரட்டலான 6 பேக் கிளிக்ஸ் வைரல்.!
மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் சிறுத்தை சிவா வரலாற்று கதை கொண்ட படமாக கங்குவாவை எடுப்பதாக கூறப்படுகிறது.
ஆகஸ்ட் 20, சென்னை (Cinema News): அதிதி நாராயணா எழுத்துக்களில், சிறுத்தை சிவா இயக்கத்தில் (Siruthai Siva), ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் (Studio Green Production), தேவி ஸ்ரீ பிரசாத் (Devi Sri Prasad) இசையில், வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவில், ரூ.350 கோடி பொருட்செலவில் தயாராகி பிரம்மாண்ட திரைப்படம் கங்குவா.
மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் சிறுத்தை சிவா வரலாற்று கதை கொண்ட படமாக கங்குவாவை எடுப்பதாக கூறப்படுகிறது. கங்கு என்பதன் தமிழாக்கம் நெருப்பு, அக்னி என்றும் பொருள்படும். Ladakh Accident: லடாக் இராணுவ வாகன விபத்தில் உயிரிழந்தோர் யார்?; விபரம் உள்ளே.!
கங்குவா திரைப்படத்தில் நாயகன் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடிக்கிறார். சூர்யாவுடன் திஷா பாதானி, கோவை சரளா, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பாபி டோல், ஆனந்தராஜ், அவினாஷ் உட்பட பலரும் நடித்து வருகின்றனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாகிறது.
சூர்யா கங்குவா திரைப்படத்தில் 6 கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படம் 2024ல் திரையரங்கில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் வெளியாகுவதற்கு முன்பே சுமார் ரூ.500 கோடி வரையிலான வருமானத்தை பார்த்துவிட்டது. தென்னிந்திய படங்களில் இதுவே முதல் முறையாக வெளியீடுக்கு முன் ரூ.500 கோடி வசூல் பார்த்த திரைப்படம் ஆகும்.
வரலாற்று பின்னணி கொண்ட திரைப்படம் என்பதால், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்காக நடிகர் சூர்யா தீவிர உடற்பயிற்சி செய்து வந்த நிலையில், அவர் தனது வயிற்றில் 6 பேக் வைத்த புகைப்படத்தை படத்தயாரிப்பு குழு வெளியிட்டு இருக்கிறது.
.#Kanguva in progress 🔥🔥 @Suriya_offl pic.twitter.com/N5R6PUel4j
— Studio Green (@StudioGreen2) August 19, 2023
(The above story first appeared on LatestLY on Aug 20, 2023 02:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

