Vijay Returned Chennai: சென்னை திரும்பினார் நடிகர் விஜய்; தாய்லாந்தில் விறுவிறுப்புடன் படமாக்கப்பட்ட தளபதி 68..!

கோவா, சென்னை 28, மங்காத்தா, மாநாடு என வெற்றிப்படங்களை கொடுத்த வெங்கட் பிரபுவுடன், நடிகர் விஜய் இணைந்துள்ளது விஜயின் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Vijay Returned Chennai: சென்னை திரும்பினார் நடிகர் விஜய்; தாய்லாந்தில் விறுவிறுப்புடன் படமாக்கப்பட்ட தளபதி 68..!
Actor Vijay Chennai Airport (Photo Credit: X)

நவம்பர் 13, சென்னை (Cinema News): வெங்கட் பிரபு (Venkat Prabhu) இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja) இசையில், ஏஜிஎஸ் என்டேர்டைன்மெண்ட் (AGS Entertainment) தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 68 (Thalapathy 68).

நடிகர் இளையதளபதி விஜய் நடிக்கும் இப்படத்திற்கு தற்போது வரை பெயர் வைக்கப்படவில்லை. இப்படத்தில் நடிகர்கள் விஜய், பிரசாந்த், பிரபு தேவா, ஸ்னேகா, லைலா, மீனக்ஷி சௌதாரி, ஜெயராம், அஜ்மல், யோகிபாபு, விடிவி கணேஷ், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த், அஜய் ராஜ் உட்பட பலரும் நடிக்கிறார்கள். WhatsApp New Feature Update: வாட்சப் மெசேஜ்களை இனி ரகசிய பின் மூலமாக மறைக்கும் வசதி அறிமுகம்; வாட்சப் அதிரடி.! 

படத்தின் பூஜை தொடர்பான வீடியோக்கள் வெளியாகி, விறுவிறுப்புடன் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு படக்குழு தாய்லாந்து சென்றிருந்தது. நடிகர் விஜயும் படப்பிடிப்புக்கு சென்றிருந்தார். இந்நிலையில், படப்பிடிப்பு முடிந்து இன்று காலை நடிகர் விஜய் சென்னை வந்தடைந்தார்.

படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னை பிரசாத் லேப் ஸ்டுடியோவில் வைத்து நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இளம் நடிகர்களுடன் கோவா, சென்னை 28 படங்களை தொடர்ந்து, அஜித்துடன் மங்காத்தா, சிம்புவுடன் மாநாடு என ஹிட் கொடுத்திருந்த நிலையில், விஜயுடன் இணைந்துள்ள திரைப்படம் அமோக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(The above story first appeared on LatestLY on Nov 13, 2023 11:23 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).