Pichaikaran 2: நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிச்சைக்காரன் படத்தின் 2-ம் பாகம் டிரைலர் லிங்க் உள்ளே..! ரிலீஸ் தேதியும் அறிவிப்பு.!

முதல் பாகத்திற்கு கிடைத்த அமோக வெற்றியை தொடர்ந்து, பிச்சைக்காரன் படத்தின் 2ம் பாகம் வெளியாகவுள்ளது. இதற்காக விஜய் ஆண்டனி தனது உயிரையும் பணயம் வைத்து பிழைத்த வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 29, சென்னை (Cinema News): சசி இயக்கத்தில், விஜய் ஆண்டனி (Vijay Antony) நடிப்பில் கடந்த 2016ம் ஆண்டு வெளியாகி தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வசூலை வாரிக்குவித்த திரைப்படம் பிச்சைக்காரன் (Pichaikaran). விஜய் ஆண்டனியின் பல மாறுபட்ட படங்களில் பிச்சைக்காரன் மிகவும் கவனிக்கத்தக்க வகையில் அங்கீகாரமும் பெற்றது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வந்தது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பின் போது விஜய் ஆண்டனி விபத்தில் சிக்கி உயிர்பிழைத்து வந்தார். MDMK DuraiSamy: மகனுக்கு பதவி கொடுத்து மதிமுகவின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய வைகோ; திருப்பூர் துரைசாமி பரபரப்பு குற்றசாட்டு..! 

Pichaikaran 2 Title Poster (Photo Credit: YouTube)

பிச்சைக்காரன் படத்தின் 2ம் பாகத்தில் விஜய் ஆண்டனி, காவ்யா தாப்பர், ரித்திகா சிங், தேவ் ஹில், ஜான் விஜய், மன்சூர் அலிகான் உட்பட பலரும் நடித்துள்ளனர். படத்தை விஜய் ஆண்டனி இயக்கியுள்ளார், இசையமைத்தும் இருக்கிறார்.

இந்நிலையில், படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ள நிலையில், படம் மே மாதம் 19ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement