Andrea Jeremiah: ஜாலியாக வெகேஷனில் என்ஜாய் செய்யும் நடிகை ஆண்ட்ரியா.. அசத்தல் கிளிக்ஸ் வெளியீடு.!
தங்களுக்கு ஏற்படும் மன ரீதியான அழுத்தத்தை குறைக்கவும், இயற்கையின் அழகை கண்டுகளிக்கவும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது இயல்பு. அந்த வகையில், நடிகை ஆண்ட்ரியா தற்போது சுற்றுலாவுக்கு சென்றுள்ளார். அவர் பதிவிட்ட புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.
ஜனவரி 25: ஆங்கிலோ - இந்தியரான நடிகை ஆண்ட்ரியா ஜெரிமியா, அரக்கோணத்தில் பிறந்து வளர்ந்தவர் ஆவார்.
இவர் இந்திய நடிகை, பின்னணி பாடகி, இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட நடிகை. Congress KS Alagiri Vs BJP Annamalai: அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால் தேர்தலில் நிற்பதா?.. காகித புலி பாஜகவுக்கு நேரடி சவால் விடுத்த கே.எஸ் அழகிரி..!

தனது 8 வயதில் பியானோவை வாசிக்க கற்றுக்கொண்ட ஆண்ட்ரியா, 2007ல் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தால் அதிகம் கவனிக்கபட்டார்.
அதனைத்தொடர்ந்து, ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், என்றென்றும் புன்னகை, அரண்மனை, தரமணி, வடசென்னை உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

பல இசையமைப்பாளர்களுடன் பாடல் பாடி இருக்கிறார். தற்போது வெகேஷனில் என்ஜாய் செய்து வரும் ஆண்ட்ரியா, அதனை இன்ஸ்டாகிராமில் போட்டோவாக பதிவிட்டுள்ளார்.
(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 25, 2023 11:30 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).
(The above story first appeared on LatestLY on Jan 25, 2023 11:31 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

