Anupama Parameswaran: அச்சச்சோ.. மேக்கப்பால் நடிகையின் முகத்தில் முளைத்த தாடி, மீசை?.. நடிகை அனுபமா பரமேஸ்வரன் வீடியோ வைரல்.!

ரீலிஸ் ஆப்ஷனை தவறாக தேர்வு செய்த நடிகை அனுபமா, தனது முகத்தில் தாடி மற்றும் மீசை வளர்ந்தது போல் வீடியோ பதிவிட அது வைரலாகியுள்ளது.

Anupama Parameswaran: அச்சச்சோ.. மேக்கப்பால் நடிகையின் முகத்தில் முளைத்த தாடி, மீசை?.. நடிகை அனுபமா பரமேஸ்வரன் வீடியோ வைரல்.!
Anupama Parameswaran Instagram Video Screen Scrap

ஜனவரி 15: தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை அனுபமா பரமேஸ்வரன் (Actress Anupama Parameswaran). இவர் மலையாள மொழியில் வெளியாகி தமிழில் திரையரங்கில் வெளியாகாமலேயே ஏகபோக ஹிட்டடித்த பிரேமம் படத்தில் நாயகனின் பள்ளிப்பருவ காதலியாகவும் நடித்திருந்தார்.

மலையாளத்தில் பிரேமத்திற்கு ('Premam' Malayalam Movie) பின்னர் கலக்கல் நாயகியாக வலம்வந்த அனுபமா, தமிழில் தனுஷுடன் கொடி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். கடந்த 2021ல் வெளியாகிய தள்ளிபோகாதே திரைப்படத்திற்கு பின்னர் அனுபமா தமிழில் வேறு படங்கள் ஏதும் நடிக்கவில்லை. Trichy Friends Died Accident: பேருந்தில் மோதி விபத்திற்குள்ளான கார்; 2 இளம் நண்பர்கள் உடல்நசுங்கி பலி..! பெற்றோருக்கு தெரியாமல் இன்ப பயணம் இறுதி பயணமான சோகம்.! 

தற்போது, சைரன் படத்தில் அவர் நடித்து வருகிறார். படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நடிகை அனுபமா பரமேஸ்வரன் முக அழகா மெருகூட்டும் பொருட்டு அழகு நிலையத்திற்கு சென்று அதனை மேம்படுத்தினார்.

அதன்பின்னர், காரில் பயணம் செய்யும் போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள ரீல்ஸில் முகத்தில் தாடி மற்றும் லேசான மீசை (Instagram Filter Goes Wrong) வளர்ந்தது போல வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார். இதனைக்கண்ட பலரும் அவரை கலாய்த்து வருகின்றனர். தனது இன்ஸ்டாகிராமில் பில்டர் தவறால் நடந்துவிட்டது என நடிகை தெரிவித்துள்ளார்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 15, 2023 09:15 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).

(The above story first appeared on LatestLY on Jan 15, 2023 09:16 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).