Ileana Pregnant: கர்ப்பமாக இருக்கும் தகவலை சொல்லி, ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய நடிகை இலியானா..!

திரையுலகில் நடிகர்-நடிகைகளின் சுப-துக்க நிகழ்ச்சிகளை எப்போதும் ரசிகர்கள் மனதார பகிர்ந்துகொள்வது உண்டு. இன்றைய நாளில் ரசிகர்களுக்கு நல்ல செய்தியை இலியானா கூறியுள்ளார்.

Ileana Pregnant: கர்ப்பமாக இருக்கும் தகவலை சொல்லி, ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய நடிகை இலியானா..!
Ileana D'Cruz Confirms Pregnancy (Photo Credit: Instagram)

ஏப்ரல் 18, மும்பை (Cinema News): இந்திய - போர்ச்சுகீசிய நடிகையான (Indian-Portuguese actress) இலியானா டி-குரூஸ் (Ileana D'Cruz) தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வரும் முன்னணி நடிகை ஆவார். கடந்த 2006-ம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான தேவதாசு திரைப்படத்தின் மூலமாக பெரிதும் கவனிக்கப்பட்டு, பல விருதுகளையும் பெற்றார்.

அதே ஆண்டில் பல்வேறு தெலுங்கு படங்களில் நடித்த நடிகை இலியானா, கேடி திரைப்படம் மூலமாக 2006ல் தமிழுக்கும் அறிமுகமானார். ஆனால், அவர் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலேயே பிற்காலத்தில் அதிகளவு நடிக்க தொடங்கினர். அவரின் அழகிய இடையை காண சிம்ரனை போல ரசிகர் பட்டாளம் அதிகரித்தது. Mukul Roy Missing: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திடீர் மாயம்; குடும்பத்தினர் கண்ணீர்.. மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி.! 

இதற்கிடையில், கடந்த 2012ம் ஆண்டு ஷங்கரின் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான நண்பன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது அவரின் நடிப்பில் உருவாகியுள்ள Unfair & Lovely படம் விரைவில் திரையில் வெளியாகவுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே இலியானா திரைத்துறையை சேர்ந்தோர்களோடு பழகி வருவதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், அவர் தற்போது கர்ப்பமாக இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், "எனது குட்டி செல்லத்தை பார்க்க நீண்ட காலம் என்னால் காத்திருக்க இயலாது" என தெரிவித்துள்ளார். தான் கர்ப்பமாக இருப்பதை மட்டும் அறிவித்துள்ள இலியானா, தனது காதலர் யார் என்பதை மட்டும் தற்போது வரை தெரிவிக்கவில்லை. எது எப்படி இருப்பினும், அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Ileana D'Cruz (@ileana_official)

(The above story first appeared on LatestLY on Apr 18, 2023 10:24 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).