Couple Nayanthara - Vignesh Shivan (Photo Credit: Instagram)

டிசம்பர் 16, சென்னை (Chennai): கடந்த 2003ம் ஆண்டு மலையாள திரைப்படங்களில் நடிகையாக அறிமுகமாகி, அதனைத்தொடர்ந்து சரத்குமாரின் இரட்டை வேடங்களில் வெளியான ஐயா திரைப்படத்தில் கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்த நடிகை நயன்தாரா (Nayanthara). அதே ஆண்டில் ரஜினிகாந்துடன் சந்திரமுகி படத்தில் நயன்தாரா நடித்திருந்தார். இப்படமும் 2005ல் வெளியாகி ஓராண்டை கடந்து வெற்றியது.

வெற்றிப்படங்கள்: அடுத்தடுத்த வெற்றிகளை சந்தித்த நயன்தாரா, சிவகாசி படத்தில் சிறப்புத்தோற்றத்தில் பாடல் ஒன்றுக்கு நடனமாடி ரசிகர்களை கவர்ந்தார். இதன்பின் வல்லவன், பில்லா, யாரடி நீ மோகினி, சத்யம், ஏகன், வில்லு, ஆதவன், பாஸ் என்ற பாஸ்கரன், ராஜா ராணி, ஆரம்பம், நண்பேன்டா, இருமுகன், வேலைக்காரன், விஸ்வாசம், பிகில், தர்பார், அண்ணாத்த, ஜவான் ஆகிய படங்களிலும் நடித்திருந்தார். தமிழில் இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். Councilor Meeting Grenades Blast: கவுன்சிலர்கள் கூட்டத்தில் குண்டுவீசி தாக்குதல்: ஒருவர் பலி., 26 பேர் படுகாயம்.. நேரலையில் பதிவான பதைபதைப்பு காட்சிகள்.! 

கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம்: கடந்த 2015ம் ஆண்டுக்கு பின்னர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் கதைகளை தேர்வு செய்த நயன்தாரா, மாயா, நானும் ரௌடி தான், காஷ்மோரா, அறம், கோலமாவு கோகிலா, மூக்குத்தி அம்மன், நெற்றிக்கண், அன்னபூரணி உட்பட பல படங்களில் நடித்துள்ளார். விரைவில் 2 படங்கள் அவரின் நடிப்பில் வெளியாகவுள்ளது.

மலர்ந்த காதல்: நானும் ரௌடிதான் படத்தில் இயக்குனராக பணியாற்றிய விக்னேஷ் சிவன் (Vignesh Shivan) - நயன்தாரா இடையே கருத்துக்கள் ஒத்துப்போக, இருவரும் பேசிபழகி பின் காதல் வயப்பட்டனர். நீண்டநாட்களாக காதலித்து வந்த ஜோடி, 9 ஜூன் 2022 அன்று திருமணம் செய்துகொண்டது. இருவரும் மகிழ்ச்சியாக வருகிறார்கள். இருவருக்கும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில், நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீட்டில் சாமி கும்பிட்டது தொடர்பான புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். Samsung Smartphone Hacking: சாம்சங் கேலக்சி ஸ்மார்ட்போன்களை குறிவைக்கும் ஹேக்கர்கள்: தப்பிப்பது எப்படி??.. எச்சரிக்கையுடன் அறிவுறுத்திய மத்திய அரசு.! 

சக்தியை நம்புங்கள்: அந்த இன்ஸ்டா பதிவில், "அன்பு, கடவுள், நன்மையின் சக்தியை நம்புங்கள் 💛❤️" எனவும் பதிவிட்டுள்ளார். இதன் வாயிலாக நடிகை நயன்தாரா தன்னை பின்தொடரும் ரசிகர்களுக்கு நன்மையின் சக்தியை நம்பக்கூறி அறிவுரை வழங்கி இருக்கிறார். தனது திரையுலக வாழ்க்கையில் பல கஷ்டங்களையும், துன்பங்களையும், துரோகங்களையும் கடந்த நயன்தாரா, இன்று தனக்கான வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுத்து, குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். தொடர்ந்து தனது படத்தின் பணிகளையும் மேற்கொள்கிறார்.

விக்னேஷ் சிவனின் அடுத்த படம்: இயக்குனர் விக்னேஷ் சிவனும் போடா போடி, நானும் ரௌடிதான், தானா சேர்ந்த கூட்டம், பாவக்கதைகள், காத்து வாக்குல இரண்டு காதல் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்கவுள்ள இரண்டாவது படத்தை, விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்க, செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் குமார் ரூ.60 கோடி பொருட்செலவில் தயாரித்து வழங்குகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by N A Y A N T H A R A (@nayanthara)