Actress Radhika Apte: நடிகை ராதிகா ஆப்தே கர்ப்பம்.. ரசிகர்கள் ஷாக்..!
பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அக்டோபர் 17, லண்டன் (Cinema News): இந்தி, தமிழ், தெலுங்கு, ஆங்கில படங்களில் நடித்து வருபவர் நடிகை ராதிகா ஆப்தே (Radhika Apte). இவர், பா. ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான கபாலி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். நடிகை ராதிகா ஆப்தே, இங்கிலாந்தை சேர்ந்த இசை கலைஞர் பெனடிக்ட் டெய்லர் (Benedict Taylor) ஆகிய இருவரும் காதலித்து, கடந்த 2012-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். Oviya Tattoo: லீக்கான சர்ச்சை வீடியோ.. ஓவியாவின் டாட்டூ புகைப்படங்கள் வைரல்.!
திருமணத்திற்கு பிறகு பெனடிக்ட் இங்கிலாந்திலும், ராதிகா மும்பையிலும் வசித்து வந்தார்கள். நடிகை ராதிகா ஆப்தே, அவ்வப்போது லண்டன் (London) சென்று அவரது கணவரை பார்த்து வருகிறார். இந்நிலையில் லண்டனில் நடந்து வரும் பி.எஃப்.ஐ. லண்டன் திரைப்பட விழாவில் (BFI London Film Festival 2024) கலந்து கொண்டார். அப்பொழுது, அவரின் வயிறு பெரிதாக இருந்தது. அதை பார்த்த பிறகே ராதிகா கர்ப்பமாக (Pregnant) இருப்பது தெரியவந்து பலரும் ஆச்சரியப்பட்டார்கள்.
சிஸ்டர் மிட்நைட் (Sister Midnight) என்கிற ஆங்கில படத்தில் நடித்து முடித்திருக்கிறார் ராதிகா. அப்படத்தின் லண்டன் ப்ரிமீயரில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்று (அக்டோபர் 17) இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்தே, அவரது ரசிகர்கள் அனைவருக்கும் தெரியவந்தது. அந்த இன்ஸ்டாகிராம் போஸ்ட்டை பார்த்துவிட்டு, திரையுலக பிரபலங்களும், அவரது ரசிகர்களும் ராதிகாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கர்ப்பமான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ராதிகா ஆப்தே:
View this post on Instagram
(The above story first appeared on LatestLY on Oct 17, 2024 11:49 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

