Sunny Leone Daughter Birthday: டிஸ்னி லேண்டில் கொண்டாட்டங்களுக்கு நடுவே, தனது மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துச்சொன்ன சன்னி லியோன்.!
Sunny Leone Daughter Birthday Celebration at Disney (Photo Credit: Instagram)

நவம்பர் 01, புளோரிடா (Cinema News): கரன்ஜித் கரன் கவுர் வோக்ரா என்ற இயற்பெயரை கொண்ட நடிகை சன்னிலியோன் (Sunny Leone), முன்னாள் ஆபாச பட (Porn Actress) நடிகை ஆவார். இந்திய குடும்பத்திற்கு கனடாவில் பிறந்து கனடா மற்றும் அமெரிக்கா நாடுகளின் குடியுரிமை பெற்றுள்ள நடிகை சன்னி லியோன், சர்வதேச அளவில் பிரசித்திபெற்ற ஒருவர் ஆவார்.

தனது 11 வயதில் முத்தம், 16 வயதில் நண்பருடன் டேட்டிங், 18 வயதில் ஓரினசேர்க்கையாளர் ஆர்வம் என இருந்து, பின்னாட்களில் ஆபாச படங்களில் நடித்து பிரபலமடைந்த சன்னி லியோன், ஆபாச படங்களில் இருந்து வெளியேறி இந்தியத் திரையுலகுக்கு அறிமுகமானார்.

முதலில் கவர்ச்சியான பாடல்களுக்கு நடனமாடி பலரையும் கிரங்கவைத்த நடிகை சன்னி லியோன், ராகினி எம்எம்எஸ், ஹேட் ஸ்டோரி 2 உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவரின் நடிப்பில் தமிழில் வீரமாதேவி திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. Man Cheated by 5 Man Gang: பெண் போல ஆசையாக பேசி, தைலமர தோப்புக்குள் இளைஞரை பதறவைத்த 5 பேர் கும்பல்..! 

கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை அவர் இந்திய திரையுலகில் நடித்து வருகிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு தனது நீண்டகால காதலர் டேனியலை திருமணம் செய்து, மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இருவருக்கும் மூன்று குழந்தைகள் இருக்கின்றனர்.

நடிகை சன்னி லியோன் அமெரிக்காவில் இருந்த போது கேன்சர் ஒழிப்பு திட்டம் மற்றும் கேன்சரால் பாதிக்கப்பட்ட நபர்களின் நலனுக்காக பொருளுதவி அளித்தார். மும்பையை சேர்ந்த ஏழை குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது அவரின் மகள் நிஷாவுக்கு இன்று பிறந்தநாள் ஆகும். இதனையொட்டி, அவர் டிஸ்னி லேண்ட் சென்றிருந்த நிலையில், அங்கு கொண்டாட்டங்களுக்கு நடுவில் தனது மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி ஆச்சரியப்படுத்தினார். இந்த வீடியோவை அவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Sunny Leone (@sunnyleone)