அக்டோபர் 13, சென்னை (Cinema News): கடந்த 2009ம் ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படத்தின் வாயிலாக திரைத்துறைக்கு அறிமுகமான நடிகை ஓவியா (Oviya Helen), தமிழில் களவாணி படத்தில் பள்ளி மாணவி கதாபாத்திரத்தில் நடித்து பலரின் மனதை கொள்ளை கொண்டார். அதனைத்தொடர்ந்து, முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு, யாருமிருக்க பயமேன், 90 எம்எல், முனி 4: காஞ்சனா, களவாணி 2 ஆகிய படங்களிலும் நடித்திருந்தார். கடந்த 2017ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 (Bigg Boss Tamil)-ல் கலந்துகொண்ட நடிகைக்கு, ஓவியா ஆர்மி (Oviya Army) என்ற மிகப்பெரிய வரவேற்பும், அடையாளமும் கிடைத்தது.
டீப் பேக் வீடியோ:
இந்நிலையில், நேற்று நடிகை ஓவியாவின் அந்தரங்க வீடியோ ஒன்று சமூக வலைத்தளமான எக்ஸ் பக்கத்தில் வெளியானது என நெட்டிசன்கள் பலரும் ட்ரெண்டிங் செய்து வந்தனர். இந்த வீடியோவில் ஓவியா போல உருவ ஒற்றுமை கொண்ட, அடையாளம் இருக்கும் பெண் ஒருவர், ஆண் நண்பருடன் தனிமையில் இருக்கிறார். இதனை வீடியோவை எடுத்து வைத்த நபர்கள், ஓவியாவின் பெயரை கூறி வைரலாக்கி வருகின்றனர் என கூறப்படுகிறது. சிலர் இது டீப் பேக் வீடியோ என கூறி வருகின்றனர். Oviya Leaked? நடிகை ஓவியாவின் அந்தரங்க வீடியோ லீக்? பதறிப்போன ரசிகர்கள்.. அதிர்ச்சியில் திரையுலகம்.!
துணிச்சல் கொண்ட நடிகை:
இதுபோன்ற எம்.எம்.எஸ் லீக் போன்ற விஷயங்களால் நடிகைகள் படும் இன்னல்கள் இன்றளவும் தொடரும் நிலையில், திரையுலகமே அதிர்ச்சி அடைந்துள்ளது. மேலும், இவ்வாறான செயல்களை அரங்கேற்றும் கும்பலை கண்டறிந்து கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் துணிச்சல் மிகுந்த தமிழ் நடிகைகளில் ஒருவரான ஓவியா, இதனை பெரிதாக எடுத்துக்கொண்டதாக தெரியவில்லை.
தக் லைப் பதில்:
இந்நிலையில், நடிகை ஓவியாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு சென்ற நபர்களில் சிலர், உங்களின் ஆபாச வீடியோ லீக் ஆகியுள்ளது.... என கொச்சையான முறையில் பல கேள்விகளை எழுப்பி இருக்கின்றனர். இதற்கு பதிலளித்துள்ள நடிகை ஓவியா, அடுத்தமுறை உங்களின் விருப்பத்தை நிறைவேற்றுகிறேன். எனக்கும் லிங்க் அனுப்புங்களேன் என அவர்களின் பாணியிலேயே கலாய்த்து இருக்கிறார். இந்த விஷயம் தொடர்பான புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
தன்னை விமர்சிப்பவருக்கு அதே பாணியில் பதில் சொன்ன ஓவியா:
She handled left ,thug life
Whoever took the video should be ashamed of himself, not her.
stay strong Oviya.#OviyaLeaked #Oviya pic.twitter.com/6M0GWXQbWj
— 𝙎 𝘼 𝙈 𝕏 👣 (@Sam_Mania_) October 12, 2024