Amy Jackson and Ed Westwick Marriage: எமி ஜாக்சனின் 2வது கல்யாணம்.. பிரித்தானியா நடிகரை கரம்பிடித்த எமி..!

ஹாலிவுட் மற்றும் இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை எமி ஜாக்சன் தனது நீண்ட நாள் காதலனை கரம் பிடித்தார்.

Amy Jackson and Ed Westwick Marriage: எமி ஜாக்சனின் 2வது கல்யாணம்.. பிரித்தானியா நடிகரை கரம்பிடித்த எமி..!
Amy Jackson and Ed Westwick (Photo Credit: @Instagram)

ஆகஸ்ட் 26, ரோம் (Cinema News): தமிழில் 2010ஆம் ஆண்டில் வெளியான 'மதராசப்பட்டினம்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான எமி ஜாக்சன் (Amy Jackson), தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் ஆங்கில மொழிப்படங்களில் நடித்து பிரபலமானார். இதற்கிடையே கடந்த 2015ஆம் ஆண்டு ஜார்ஜ் பனையோடோ (George Panayiotou) என்பவருடன் டேட்டிங் செய்து வந்த எமி ஜாக்சன், அவர் மூலம் குழந்தைக்கு தாயானார். தொடர்ந்து இருவரும் திருமணமும் செய்தனர். ஆனால் இந்த ஜோடி 2021ல் பிரிந்தது. Vijayakant: விஜயகாந்தின் ஏஐ உருவம்; கோட் திரைப்படத்தில் ரசிகர்களுக்கு இன்ப விருந்து.! அசத்தல் அப்டேட் இதோ.!

எமி ஜாக்சன் 2வது கல்யாணம்: தொடர்ந்து எமி ஜாக்சன், பிரித்தானியாவின் பிரபல நடிகர் எட் வெஸ்ட்விக் (Ed Westwick) என்பவரை கடந்த சில வருடங்களாகவே காதலித்து வந்தார். இவர்கள் இருவருக்கும் கடந்த ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், தற்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். திருமணம் தொடர்பான புகைப்படங்களை எமி ஜாக்சன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் போஸ்ட்டை பார்த்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

எமி ஜாக்சன் வெட்டிங் போட்டோஸ்:

 

View this post on Instagram

 

A post shared by Ed Westwick (@edwestwick)

(The above story first appeared on LatestLY on Aug 26, 2024 12:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).