BiggBoss S7 Wild Card Entry: வெளியேறிய ஐவருக்கு ஈடாக, வைல்ட் கார்டில் ஆப்பு வைத்த பிக்பாஸ்; சூடுபிடிக்கப்போகும் போட்டி.!
அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி முதல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி, தற்போது 30 வது நாளில் போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக 5 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் வீட்டிற்குள் அனுப்பி வைங்கப்பட்டுள்ளனர்.
அக்டோபர் 30, சென்னை (Television News):விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் தொடர், தற்போது ஏழாவது சீசன் போட்டியில் அடியெடுத்து வைத்துள்ளது. நடப்பு சீசனில் 28 நாட்கள் நிறைவடைந்து விட்டன. 105 நாட்கள் வீட்டில் இருக்கும் இரண்டு போட்டியாளர்களில் ஒருவர் வெற்றியாளராகவும், மற்றொருவர் இரண்டாவது வெற்றியாளராகவும் தேர்வு செய்யப்படுவார்.
தற்போதைய போட்டி கடந்த அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி முதல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள ஏவிஎம் பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட பிக்பாஸ் வீடு கட்டமைக்கப்பட்டு, அங்கு 24 மணி நேரமும் போட்டியாளர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த போட்டி ஜனவரி மாதம் 14ஆம் தேதி, பொங்கல் பண்டிகை முன்னிட்டு நிறைவு பெறும். நடப்பு ஆண்டில் பிக்பாஸ் வீட்டிற்குள் ஐஸு, அக்ஷயா, கூல் சுரேஷ், ஜோவிகா, மணி சந்திரா, மாயா, நிக்சன், பூர்ணிமா, பிரதீப், ரவீனா, விசித்ரா, சரவணன் விக்ரம், விஷ்ணு, வினுஷா, யுகேந்திரன், விஜய், பாவா செல்லத்துரை, அனன்யா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். Train Crash Vizag: 9 பேரின் உயிரை காவுவாங்கிய இரயில் விபத்து; பாசஞ்சர் இரயில்கள் தடம்புரண்டதால் விபரீதம்.!
இவர்களில் பாவா செல்லத்துரை மட்டும் எட்டாவது நாளில் தனது விருப்பத்திற்கு ஏற்ப வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில், அனன்யா, விஜய், யுகேந்திரன், வினுஷா ஆகியோர் மக்களின் வாக்கு கிடைக்காத காரணத்தால் போட்டியிலிருந்து வாரம் ஒரு முறை சுழற்சி முறையில் வெளியேற்றப்பட்டனர்.
மொத்தமாக 23 போட்டியாளர்களில் ஐந்து பேர் வீட்டில் இருந்து வெளியேறி விட, எஞ்சிய 18 பேர் தற்போது ஆட்டத்தை ஆடி வந்தனர். இந்நிலையில், பிக் பாஸ் இல்லத்திற்குள் நேற்று வைல்ட்கார்ட் எண்ட்ரியாக கானா பாலா, கோவில்பட்டி அன்னபாரதி, தினேஷ் கோபால்சாமி, அர்ச்சனா, ஆர்ஜெ ப்ராவோ ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பொதுவாக வைல்ட் கார்ட் என்ட்ரி என்பது ஒரு நபருக்கு மட்டுமே அனுமதிக்கப்படும் நிலையில், தற்போதைய சீசனில் 5 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் கிட்டத்தட்ட 27 நாட்கள் போட்டி நடந்த விதம், போட்டியாளர்கள் நடந்த காட்சிகளை வெளியில் இருந்து பார்த்த நிலையில், தற்போது அவர்கள் வீட்டிற்குள் சென்றுள்ளனர். இதனால் அங்கு என்ன மாதிரியான மாற்றங்கள் நிகழப்போகிறது என்பதற்கான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதேபோல, 4 போட்டியாளர்களை வெளியேற்றிய மகிழ்ச்சியில், எஞ்சிய 18 போட்டியாளர்கள் மீது கவனம் பெரும் என எதிர்பார்ப்பு இருந்த நிலையில், போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக ஷாக் வழங்கும்பொருட்டு மீண்டும் 5 பேரை உள்ளே அனுப்பி, வீட்டில் உள்ள ஆட்களின் எண்ணிக்கையை அதிகரித்து இருக்கின்றனர். இது போட்டியின் தனித்தன்மையை ஒவ்வொருவரும் தனித்துவமாக நிரூபிக்க கூடுதலான முயற்சி எடுக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Oct 30, 2023 09:56 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

