Bigg Boss Tamil Season 8: போட்டியாளர்களை கேள்விக்கணைகளால் துளைத்தெடுக்கும் விஜய் சேதுபதி.. பிக் பாசில் இன்னைக்கு ஒரு சம்பவம்.!
தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் போட்டிக்குச் சென்ற பிக் பாஸ் போட்டியாளர்கள், தன்னிலை மறந்து வீட்டுக்கும், அதில் உள்ள பொருட்களுக்கும் அடித்துக்கொண்ட சம்பவத்தை வைத்து தொகுப்பாளர் கேள்விகளை தயார் செய்து வைத்துள்ளார்.
அக்டோபர் 12, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் (Vijay TV) ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil), அக்.06 முதல் கோலாகலமான கொண்டாட்டத்துடன் தொடங்கியது. நடப்பு சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் இல்லத்திற்குள் ரவீந்திரன், சாச்சனா நவிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், ஆர்ஜெ ஆனந்தி, சுனிதா, ஜெப்ரி, ரஞ்சித், பவித்ரா, சௌந்தர்யா, அருண் பிரசாத், தர்ஷிகா, விஜே விஷால், அன்ஷிதா, அர்னவ், முத்துக்குமரன், ஜாக்குலின் ஆகியோர் போட்டியாளர்களாக நுழைந்தனர். முதல் நாளே 24 மணிநேர எலிமினேஷன் பிரிவில் சாச்சனா வெளியேற்றப்பட்டார். பின் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலமாக avar வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டார். Bigg Boss Tamil Season 8: "இதுக்கு எதுக்கு டா என்ன அழவச்சி அனுப்புனீங்க" மீண்டும் என்ட்ரி கொடுத்த சச்சனா..!
வறுத்தெடுக்கப்போகும் விஜய் சேதுபதி?
இதனிடையே, போட்டியாளர்கள் வீட்டிற்குள் சென்றபின்னர் இருக்கும் அறை, மளிகைப்பொருட்கள் போன்றவற்றுக்கு அடித்துக்கொண்டு இருக்கின்றனர். ஆண்கள் - பெண்கள் என இரண்டு அணிகளும் தனித்தனியே பிரிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒவ்வொரு தரப்பும் தனது அட்வான்டேஜ் நிலைக்கு செல்கிறது. இதனால் போட்டி பார்க்க சுவாரஷ்யமான இருந்தாலும், இதற்கெல்லாமா அடித்துக்கொள்வது என்ற கேள்வியை எழுப்ப நினைக்கிறது. இதனால் ஆவேசமடைந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விஜய் சேதுபதியும், அவர்களை கேள்விகளால் துளைத்தெடுக்க தயாராகி இருக்கிறார். வாரத்தின் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை போட்டியாளர் தக்கவைப்பு, எலிமினேஷன் உட்பட பிற உரையாடலும் இன்று நடுவராக விஜய் சேதுபதியுடன் நடக்கும் என்பதால், இன்றைய நிகழ்ச்சியை காண எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
போட்டியாளர்களை கேள்விக்கணைகளால் துளைத்தெடுக்க காத்திருக்கும் விஜய் சேதுபதி:
#Day6 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #BBT #Disneyplushotstartamil #VijayTelevision #VijayTV pic.twitter.com/VVzKywgRvO
— Vijay Television (@vijaytelevision) October 12, 2024
(The above story first appeared on LatestLY on Oct 12, 2024 05:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

