Bigg Boss Tamil Season 8: ரஞ்சித், சச்சினா மீது பாயும் அம்புகள்; சர்ச்சையில் சிக்கும் ஜெப்ரி? அடுத்த அதகளத்தை கிளப்பும் பிக் பாஸ்.!

முதல் வாரத்தில் ரவீந்தர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், அடுத்த நாமினேஷன் செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது.

Bigg Boss Tamil Season 8: ரஞ்சித், சச்சினா மீது பாயும் அம்புகள்; சர்ச்சையில் சிக்கும் ஜெப்ரி? அடுத்த அதகளத்தை கிளப்பும் பிக் பாஸ்.!
Day 8 Bigg Boss Tamil Season 8 (Photo Credit: @VijayTelevision X)

அக்டோபர் 14, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் (Vijay TV) ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil), கடந்த அக்.06 முதல் கோலாகலமான கொண்டாட்டத்துடன் தொடங்கியது. நடப்பு சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் வீட்டிற்குள் ரவீந்திரன், சாச்சனா நவிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், ஆர்ஜெ ஆனந்தி, சுனிதா, ஜெப்ரி, ரஞ்சித், பவித்ரா, சௌந்தர்யா, அருண் பிரசாத், தர்ஷிகா, விஜே விஷால், அன்ஷிதா, அர்னவ், முத்துக்குமரன், ஜாக்குலின் ஆகியோர் இருக்கின்றனர். 24 மணிநேர எலிமினேஷன் பிரிவில் சாச்சனா வெளியேற்றப்பட்டு, பின் 4வது நாளில் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலமாக வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டார். முதல் வாரத்தில் ரவீந்தர் எலிமினேட் செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். Oviya Leaked: ஓவியாவின் வீடியோ கேட்டு அலையும் கூட்டம்; உணர வேண்டியது என்ன? சோசியல் மீடியாவில் கருத்துக் கலவரம்..! 

இந்நிலையில், இரண்டாவது வாரத்திற்கான டாஸ்க் தொடர்பாக பிக் பாஸ் அறிவித்தபோது, பலரும் ரஞ்சித், ஜெப்ரி, சாச்சனா, சவுந்தர்யா ஆகியோரின் மீது தங்களின் அதிக வாக்குகளை முன்வைத்தனர். இதனால் இந்த வாரத்திற்கான நாமினேஷன் லிஸ்டில் இவர்கள் இருப்பார்கள் என தெரியவந்துள்ளது. மேலும், ஜெப்ரி தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை தவறுதலாக எடுத்துக்கொண்டு செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேபோல, சனி & ஞாயிற்றுக்கிழமை நடந்த உரையாடல் ஆட்டத்தை வேறு பரிணாமத்திற்கு கொண்டு செல்லும் திட்டத்துடன் எடுத்துரைக்கப்ட்டுள்ளது.

இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ:

முத்துகுமாரனிடம் தொடர்ந்த வாக்குவாதம்:

பிக் பாஸ் வீட்டின் இரண்டாவது வார நாமினேஷன்:

(The above story first appeared on LatestLY on Oct 14, 2024 05:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).