Bigg Boss Tamil Season 8: "கொஞ்சம் அன்பா விசாரிப்போமா?" - இன்றைய மாஸ் சம்பவத்துக்கு தயாரான விஜய் சேதுபதி.. ப்ரோமோ உள்ளே.!
கடந்த வாரம் இப்படியெல்லாம் விளையாடுறீங்க என கேட்ட விஜய் சேதுபதி, இந்த வாரம் இப்படியெல்லாம் விளையாடுறாங்களே என கூறி இருக்கிறார்.
அக்டோபர் 19, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் (Vijay TV) ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil), அக்.06 முதல் கோலாகலமான கொண்டாட்டத்துடன் தொடங்கியது. நடப்பு சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் இல்லத்திற்குள் ரவீந்திரன், சாச்சனா நவிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், ஆர்ஜெ ஆனந்தி, சுனிதா, ஜெப்ரி, ரஞ்சித், பவித்ரா, சௌந்தர்யா, அருண் பிரசாத், தர்ஷிகா, விஜே விஷால், அன்ஷிதா, அர்னவ், முத்துக்குமரன், ஜாக்குலின் ஆகியோர் போட்டியாளர்களாக நுழைந்தனர். முதல் நாளே எலிமினேஷனில் வெளியேற்றப்பட்ட சாச்சனா, மீண்டும் 4வது நாளிலேயே உள்ளே வந்தார். முதல் வாரத்தின் முதல் எவிக்ஷனில் ரவீந்தர் வெளியேற்றப்பட்டார். Venom The Last Dance: மிரளவைக்கும் காட்சிகளுடன் வெனம் தி லாஸ்ட் டான்ஸ்: அக்.25 முதல் உங்கள் அபிமான திரையரங்குகளில்.. விபரம் உள்ளே.!
இரண்டாவது வாரம் சனிக்கிழமை இன்று:
இந்நிலையில், இரண்டாவது வாரமான சனிக்கிழமை இன்று, பிக் பாஸ் போட்டியாளர்களுடன் விஜய் சேதுபதி உரையாற்றுகிறார். முதல் வாரத்தில் அனைவரின் விளையாட்டையும் கேள்வி எழுப்பி இருந்தவர், இன்றைய வாரம் அவர்களின் விளையாட்டை தொடக்கி கொஞ்சம் மக்கள் மத்தியில் அடையாளம் பெற்றுள்ளனர் என்பதை மறைமுகமாக தெரிவிக்கிறார். அதனைத்தொடர்ந்து, அவர் போட்டியாளர்களிடம் கொஞ்சம் அன்பாக விசாரிக்கலாம் என தெரிவிக்கிறார். இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வைரலாகி வருகிறது. நாளை எலிமினேஷனும் இருக்கும் என்பதால், பார்வையாளர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த வார எலிமினேசன் லிஸ்டில் அர்னவ், தீபக், தர்ஷிகா, ஜெப்ரி, முத்துக்குமரன், ரஞ்சித், சாச்சனா, சவுந்தர்யா, விஷால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த வாரத்தின் கேப்டனாக சத்யா பொறுப்பேற்று இருந்தார். அவர் ஆண்களின் பக்கமே செயல்பட்டதாகவும் குற்றசாட்டுகள் பெண்கள் தரப்பில் முன்வைக்கப்பட்டு இருந்தது.
அக்.19 பிக் பாஸ் முதல் ப்ரோமோ உங்களின் பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளது:
#Day13 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #Disneyplushotstartamil #VijayTelevision #VijayTV pic.twitter.com/luLGZyyY9H
— Vijay Television (@vijaytelevision) October 19, 2024
(The above story first appeared on LatestLY on Oct 19, 2024 03:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

