Bigg Boss Tamil Season 8: கவனிச்சிறலாமா? - சரவெடி சம்பவத்துக்கு தயாராகுங்க பிக் பாஸ் ரசிகர்களே.. வெளியானது ப்ரோமோ.!
பிக் பாஸ் வீட்டில் மூன்றாவது சனிக்கிழமை நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பு செய்யப்படும் நிலையில், விஜய் சேதுபதியின் "கவனிச்சிறலாமா" என்ற வசனத்துடன் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் தொடர்பான அப்டேட்களை தொடர்ந்து பெற லேட்டஸ்ட்லி தமிழுடன் (LatestLY Tamil) இணைந்திருக்கவும்.
அக்டோபர் 26, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் (Vijay TV) ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil), அக்.06 முதல் கோலாகலமான கொண்டாட்டத்துடன் தொடங்கியது. நடப்பு சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் இல்லத்திற்குள் ரவீந்திரன், சாச்சனா நவிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், ஆர்ஜெ ஆனந்தி, சுனிதா, ஜெப்ரி, ரஞ்சித், பவித்ரா, சௌந்தர்யா, அருண் பிரசாத், தர்ஷிகா, விஜே விஷால், அன்ஷிதா, அர்னவ், முத்துக்குமரன், ஜாக்குலின் ஆகியோர் போட்டியாளர்களாக நுழைந்தனர். IIFA Utsavam 2024: ஐஃபா உற்சவம் 2024.. கடல் கன்னி போன்று வந்த இரண்டு கனவு கன்னிகள்.!
முக்கியப்புள்ளிகள் வெளியேற்றப்பட்டனர்:
முதல் நாளே எலிமினேஷனில் வெளியேற்றப்பட்ட சாச்சனா, மீண்டும் 4வது நாளிலேயே உள்ளே வந்தார். முதல் வார எவிக்ஷனில் ரவீந்தர், இரண்டாவது வாரத்தில் அர்னவ் அடுத்தடுத்து வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து மூன்றாவது வாரத்திற்கான நாமினேஷன் பட்டியலில் பவித்ரா ஜனனி, அருண் பிரசாத், தர்ஷா குப்தா, முத்துக்குமரன், ஜாக்குலின், சௌந்தர்யா, அன்ஷிதா, சத்யா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த வாரத்தில் நடந்த பிபி டாஸ்க், விஜே விஷாலின் நடனம் ஆகியவை கவனத்தை பெற்றது. அதேவேளையில், பெண்கள் அணி சாச்சனாவை பகடைக்காயாக பயன்படுத்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட சம்பவம் நடந்தது. அப்பாவி அருண் உதவி செய்யச் சென்று சிக்கிக்கொண்டார். Bigg Boss: பிக் பாஸ் வீட்டிற்குள் போகும் மக்கள்.. வேற லவல் ட்விஸ்ட்.!
கவனிச்சிறலாமா?
இந்நிலையில், "விளையாட்டு ஒன்றுதான். அதில் கட்டம் கட்டுகிறார்களா? ஆக்ரோஷத்தை காட்டுறாங்களா? சுவாரஷ்யத்தை கூட்டுறாங்களா?. அப்போ நாம விளையாடுவதை வைத்து தான் அவர்களை நாம் சொல்லுவோம். அப்போது நாம் கவனிக்க வேண்டியது விளையாடுபவர்களை அல்ல, அவர்களின் யுக்தியைத்தான். அவர்களின் புத்தியைத்தான், கவனிச்சிறலாமா?" என போட்டியை நேரில் காணும் போட்டியாளர்களின் கரகோசத்துடன் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதேபோல, இந்த வாரம் எலிமினேஷனில் தர்ஷா குப்தா வெளியேறலாம் என தெரியவந்துள்ளது.
போட்டியாளர்களை வறுத்தெடுக்க காத்திருக்கும் தொகுப்பாளர் விஜய் சேதுபதி:
#Day20 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #BBT #BBTamilSeason8 #VijayTelevision #VijayTV pic.twitter.com/M8fToZqlKE
— Vijay Television (@vijaytelevision) October 26, 2024
(The above story first appeared on LatestLY on Oct 26, 2024 02:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

