Bigg Boss Tamil Season 8: நமத்துப்போன பட்டாசும்., டமால் டுமீலும் - கொளுத்திப்போட்ட பிக் பாஸ்.. கிரிஞ்துதனத்தில் சவுந்தர்யா?.
தீபாவளியை முன்னிட்டு பிக் பாஸ் வீட்டில் சரவெடியாக வெடிப்போர் முதல் நமத்துப்போன பட்டாசு வரை பட்டம் கொடுக்கப்பட்டு போட்டி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 01, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் (Vijay TV) ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil), அக்.06 முதல் கோலாகலமான கொண்டாட்டத்துடன் தொடங்கியது. நடப்பு சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் இல்லத்திற்குள் ரவீந்திரன், சாச்சனா நவிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், ஆர்ஜெ ஆனந்தி, சுனிதா, ஜெப்ரி, ரஞ்சித், பவித்ரா, சௌந்தர்யா, அருண் பிரசாத், தர்ஷிகா, விஜே விஷால், அன்ஷிதா, அர்னவ், முத்துக்குமரன், ஜாக்குலின் ஆகியோர் போட்டியாளர்களாக நுழைந்தனர். ரவீந்தர், அர்னவ், தர்ஷா குட்தா ஆகியோர் எலிமினேஷன் முறையில் வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்களில் தர்ஷா வைல்ட் கார்ட் என்ட்ரி முறையில் மீண்டும் வீட்டிற்குள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. Squid Game Season 2: ஸ்குவிட் கேம் சீசன் 2: அசத்தல் டீசர் உள்ளே.. உலகளவில் டிசம்பர் 26ல் வெளியீடு.!
நமத்துப்போன பட்டாசும், எவிக்சன் ப்ரீ பாஸ் வாக்குவாதமும்:
இந்த வாரத்திற்கான எலிமினேஷன் பட்டியலில் அன்ஷிதா, அருண் பிரசாத், தீபக், ஜாக்குலின், ஜெப்ரி, பவித்ரா ஜனனி, ரஞ்சித், சத்யா, சுனிதா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். தீபாவளி கொண்டாட்டத்துடன் இந்த வாரம் சிறப்பாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதனிடையே, இன்று பிக் பாஸ் போட்டியாளர்களின் சரவெடி போல டமால், டுமீல் என வெடிப்பவர், நமதுபோன பட்டாசு உட்பட பல பட்டங்களை கொடுக்க உத்தரவிடுகிறார். அதன்படி, பலரும் டமால், டுமீல் பட்டாசாக சுனிதாவை முன்னிறுத்தி பேசுகின்றனர். நமத்துப்போன பட்டாசாக ஜெப்ரி ரஞ்சித்தை கூறுகிறார். இதனால் கடுப்பான ரஞ்சித் நமத்துப்போன பட்டாசுதானே என கிட்ட சென்றால், திடீரென வெடித்து முகமெல்லாம் கருகிவிடும் என தனது பதிலை தருவது போன்ற காட்சிகள் இன்றைய ப்ரோமோவில் வெளியாகியுள்ளது. அதேநேரத்தில், எவிக்சன் ப்ரீ பாசில் பெண்கள் அணியிடையே வாக்குவாதமும் உண்டாகிறது. அதேநேரத்தில், சவுந்தர்யா எந்த செயலை பிறர் செய்தாலும் கிறிஞ்சித்தனம் குறித்து பேசி வரும் நிலையில், அதுதொடர்பான விவாதமும் நடக்கிறது.
நமத்துப்போன பட்டாசு பட்டம் தொடர்பான ப்ரோமோ:
#Day26 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #Disneyplushotstartamil #VijayTelevision #VijayTV pic.twitter.com/cqFcJAAkbf
— Vijay Television (@vijaytelevision) November 1, 2024
எவிக்சன் ப்ரீ பாஸ் குறித்து போட்டியாளர்கள் வாக்குவாதம்:
#Day26 #Promo2 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #Disneyplushotstartamil #VijayTelevision #VijayTV pic.twitter.com/IwVr5Jpace
— Vijay Television (@vijaytelevision) November 1, 2024
(The above story first appeared on LatestLY on Nov 01, 2024 02:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

