Bigg Boss Tamil Season 8: செருக்குடன் சீரிய குமரனை, கிரீடம் கதை சொல்லி ஆப் செய்த விஜய் சேதுபதி; இன்னைக்கி மாஸ் சம்பவம் லோடிங்.!

வீட்டில் நடக்கும் ஆக்டிவிட்டி விவகாரங்களில் மறைமுகமாக போட்டியாளர்களிடம் தன்னை முன்னிலைப்படுத்தி மக்கள் மத்தியில் பிரபலமான முத்துகுமாரனின் செயல்பாடுகளை விஜய் சேதுபதி கண்டித்துள்ளார்.

Bigg Boss Tamil Season 8: செருக்குடன் சீரிய குமரனை, கிரீடம் கதை சொல்லி ஆப் செய்த விஜய் சேதுபதி; இன்னைக்கி மாஸ் சம்பவம் லோடிங்.!
Bigg Boss Tamil Season 8 | Day 28 Promo (Photo Credit: @VijayTelevision X)

நவம்பர் 03, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் (Vijay TV) ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil), அக்.06 முதல் கோலாகலமான கொண்டாட்டத்துடன் தொடங்கியது. நடப்பு சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் இல்லத்திற்குள் ரவீந்திரன், சாச்சனா நவிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், ஆர்ஜெ ஆனந்தி, சுனிதா, ஜெப்ரி, ரஞ்சித், பவித்ரா, சௌந்தர்யா, அருண் பிரசாத், தர்ஷிகா, விஜே விஷால், அன்ஷிதா, அர்னவ், முத்துக்குமரன், ஜாக்குலின் ஆகியோர் போட்டியாளர்களாக நுழைந்தனர். Rajinikanth Wish to Team Amaran: அமரன் திரைபடக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த்; மகிழ்ச்சியில் படக்குழு.!

இந்த வாரம் அன்ஷிதா எலிமினேஷன்?

ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா ஆகியோர் எலிமினேஷன் முறையில் வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்களில் தர்ஷா வைல்ட் கார்ட் என்ட்ரி முறையில் மீண்டும் வீட்டிற்குள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரத்திற்கான எலிமினேஷன் பட்டியலில் அன்ஷிதா, அருண் பிரசாத், தீபக், ஜாக்குலின், ஜெப்ரி, பவித்ரா ஜனனி, ரஞ்சித், சத்யா, சுனிதா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். தீபாவளி கொண்டாட்டத்துடன் இந்த வாரம் சிறப்பாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அன்ஷிதா இந்த வாரம் எலிமினேட் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முத்துகுமாரனுக்கு கண்டனம்:

இன்று ஒரு போட்டியாளர் எலிமினேஷன் முறையில் வெளியேற்றப்படும் நிலையில், வைல்ட் கார்ட் என்ட்ரி இன்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், முத்துக்குமரன் போட்டியாளர்களிடம் தன்னை முன்னலைப்படுத்தி விறுவிறுப்புடன் பிக் பாஸ் ஆட்டத்தை சுவாரஷ்யமாக்கும் நிலையில், ஒருகட்டத்தில் தொகுப்பாளரின் வேலைகளையும் செய்துகொண்டதாக தெரியவருகிறது. இதனால் விஜய் சேதுபதி முத்துகுமாரனை கண்டிக்கிறார். இந்த ப்ரோமோ வைரலாகி வருகிறது.

முத்துகுமாரனின் செயல்பாடுகளை கண்டிக்கும் விஜய் சேதுபதி:

இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ இதோ:

(The above story first appeared on LatestLY on Nov 03, 2024 12:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).