Ravindar Evicted: பிக் பாஸில் இருந்து வெளியேறினார் ரவீந்தர்; பேட் மேனுக்கு முன்பே தெரிந்த ரகசியம்.!
பேட் மேன் என வருணித்துக்கொள்ளும் ரவீந்தர், பிக் பாஸ் இல்லத்தில் முதல் போட்டியாளராக நுழைந்தவர், முதல் வாரத்திலேயே எவிக்ட் செய்யப்பட்டதால் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.
அக்டோபர் 14, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் (Vijay TV) ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil), கடந்த அக்.06 முதல் கோலாகலமான கொண்டாட்டத்துடன் தொடங்கியது. நடப்பு சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் வீட்டிற்குள் ரவீந்திரன், சாச்சனா நவிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், ஆர்ஜெ ஆனந்தி, சுனிதா, ஜெப்ரி, ரஞ்சித், பவித்ரா, சௌந்தர்யா, அருண் பிரசாத், தர்ஷிகா, விஜே விஷால், அன்ஷிதா, அர்னவ், முத்துக்குமரன், ஜாக்குலின் ஆகியோர் இருக்கின்றனர். முதல் நாளே 24 மணிநேர எலிமினேஷன் பிரிவில் சாச்சனா வெளியேற்றப்பட்டு, பின் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலமாக வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டார். Tamil Rockers: வேட்டையன் படத்தை படம்பிடித்த தமிழ் ராக்கர்ஸ் கும்பலை சேர்ந்த இருவர் கைது; கேரளாவில் சிக்கிய குருவிகள்.!
ரவீந்தர் - ரஞ்சித் (Ravindar Ranjith Fight) சண்டை:
கடந்த ஒரு வாரமாக பிக் பாஸ் போட்டியாளர்கள் வீட்டில் தங்களின் டாஸ்குகளை திறம்பட செய்து இருந்தனர். முதல் கேப்டனாக தர்ஷிகா தேர்வு செய்யப்பட்டு இருந்தார். போட்டியின் சுவாரஷ்யத்தன்மையை அதிகரிக்கும் வகையில், ரவீந்தர் - ரஞ்சித் போலியான சண்டை நாடகம் ஒன்றை செய்து இருந்தனர். இது பல சிக்கலை வீட்டிற்குள் வழிவகுக்க, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் விஜய் சேதுபதி போட்டியாளர்களுக்கு அதன் நிலவரத்தை எடுத்துரைத்து புரியவைத்தார்.
ரவீந்தர் எலிமினேஷன்:
இந்நிலையில், நேற்று மக்களின் வாக்குகளை குறைவாக பெற்றிருந்த ரவீந்தர், வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவர் முன்னதாகவே முதல் வாரத்தில் நான் தான் இந்த வீட்டில் இருந்து வெளியே செல்லும் நபராக இருப்பேன் என தனது அனுமானத்தின் பேரில் கூறி இருந்தார். அதன்படியே, அவர் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். வீட்டில் இருந்து அவர் வெளியே வந்ததும் போட்டியாளர்களுக்கு பல அறிவுரையும் வழங்கி இருந்தார். தனது கணிப்பு பழித்துவிட்ட நிலையில், இனியாவது நீங்கள் பிக் பாஸ் கேமை விளையாட ஆரம்பியுங்கள் என்றும் கூறி இருந்தார்.
(The above story first appeared on LatestLY on Oct 14, 2024 08:05 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

