Bollywood Actress Went Shopping Together: திரிப்தி டிம்ரி - சாம் மெர்சன்ட் இருவருக்கும் இடையே காதலா..? - வீடியோ வைரல்..!

திரிப்தி டிம்ரியும் சாம் மெர்சன்டும் காதலிப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்ற நிலையில், தற்போது வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Bollywood Actress Went Shopping Together: திரிப்தி டிம்ரி - சாம் மெர்சன்ட் இருவருக்கும் இடையே காதலா..? - வீடியோ வைரல்..!
Actress Tripti Dimri (Photo Credit: Instagram)

மார்ச் 22, மும்பை (Cinema News): பிரபல பாலிவுட் நடிகையான திரிப்தி டிம்ரி, 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் வெளிவந்த 'அனிமல்' திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ரூ.550 கோடிக்கு மேல் வசூல் செய்து இப்படம் சாதனை படைத்தது. Transgenders Attacking Lawyer: வழக்கறிஞரை அடித்து தாக்கிய திருநங்கைகள் – மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு..!

கடந்த மாதம் 30-வது பிறந்தநாளை திரிப்தி டிம்ரி கொண்டாடியுள்ளார். சாம் மெர்சன்ட் என்பவர் இவருடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் பதிவு செய்து 'பிறந்தநாள் வாழ்த்துகள் அன்புக்குரிய திரிப்தி' என்று எழுதி, அதோடு இதய எமோஜியையும் பதிவிட்டுள்ளார். இந்த பதிவை திரிப்தியும் இதய எமோஜி போட்டு பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் இருவரும் காதலிக்கின்றனர் என்று சமூக வலைதளங்களில் பரப்பினர்.

இந்நிலையில், இவர் அவரது காதலன் என்று கூறப்பட்ட சாம் மெர்சன்டுடன் ஷாப்பிங் செய்யும் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது. திரிப்தி டிம்ரி சிங்கிள் என்று தெரிவித்திருந்த நிலையில், இவ்வாறு அவர் சாம் மெர்சன்டுடன் வெளியில் சுற்றித்திரிவது ரசிகர்களுக்கிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Mar 22, 2024 06:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).