Brahmastra Part 2 & 3: பிரம்மாஸ்திரா படத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகம் ரிலீஸ் எப்போது?.. மனம்திறந்த இயக்குனர்..!
இந்திய அளவில் மெகா ஹிட் அடித்த பிரம்மாஸ்திரா திரைப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் கவர்ந்தது. பண்டைய காலத்தில் இருந்த சக்திகளை நிகழ்காலத்திற்கு ஏற்ப மாற்றி எடுக்கப்பட்டு, அதற்கு கிடைத்த வரவேற்பால் படம் அடுத்தகட்டத்தை நோக்கி நகருகிறது.
ஏப்ரல் 04, (Cinema News): அயன் முகேர்ஜியின் (Ayan Mukerji) எழுத்து-இயக்கத்தில், ரன்பீர் கபூர் (Ranibir Kapoor), ஆலியா பட் (Alia Bhat), அமிதாப் பச்சன் (), மௌனி ராய் (Mouni Roy), நாகர்ஜுனா (Nagarjuna), ஷாருக்கான் (ShahRukh Khan) ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் பிரம்மாஸ்திரா (Brahmastra Part One). படத்தின் இசையமைப்பு பணிகளை தனுஜ் டிக்கு மேற்கொண்டுள்ளார். இந்த படம் கடந்த செப்டம்பர் மாதம் 2022ல் வெளியானது.
படம் இந்திய அளவிலும், உலக அளவிலும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு பலருக்கும் நிலவி வருகிறது. இந்த நிலையில், படத்தின் இயக்குனர் அயன் முகர்ஜி அதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். Twitter Logo: குருவியை தூக்கிவிட்டு நாயை முன்னிறுத்திய எலான் மஸ்க்.. லோகோவை மாற்றி அதிரவைத்த சம்பவம்.!
பிரம்மாஸ்திரா படத்தின் முதல் பாகத்தை எடுத்து வெளியிட ரூ.400 கோடி வரை செலவாகியிருந்த நிலையில், உலகளவில் ரூ.400 கோடி வசூல் செய்திருந்தது.
இயக்குனர் அயன் முகர்ஜியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவின்படி, 2026ல் பிரம்மாஸ்திரா படத்தின் 2ம் பாகமும், 2027ல் 3ம் பாகமும் வெளியாகவுள்ளது. அவர் அதற்கான கதைகளை தயார் செய்து, இரண்டு கதையையும் ஒருங்கே எடுத்து அடுத்தடுத்து வெளியிட முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
View this post on Instagram
(The above story first appeared on LatestLY on Apr 04, 2023 12:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

