Sivakarthikeyan's 'Amaran' Independence Day Special: போர் செல்லும் வீரன்.. தேசபக்தி பாடலுடன் வெளியான அமரன் படத்தின் மேக்கிங் வீடியோ..!
’அமரன்’ படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் இன்று (ஆகஸ்ட் 14) வெளியிட்டுள்ளனர்.
ஆகஸ்ட் 14, சென்னை (Cinema News): மாவீரன் மற்றும் அயலான் வெற்றியை தொடர்ந்து, தற்போது சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) அவரது 21வது படத்தில் நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் ஃபிலிம் தயாரித்துள்ள இப்படத்துக்கு அமரன் (Amaran) என டைட்டில் வைத்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகை சாய் பல்லவி முதன்முறையாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்துள்ளார். புவன் அரோரா, ராகுல் போஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அமரன் ரிலீஸ்: எப்போதும் நகைச்சுவை பாணியில் நடிக்கும் சிவகார்த்திகேயன் இப்படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படம் ஆனது இந்திய ராணுவ வீரரான மேஜர் முகுந்த் என்பவரின் வாழ்க்கை வரலாறு ஆகும். ஆனால் இது பயோபிக் படம் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றது. அமரன் படமானது தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. Director Cheran: ஹாரன் அடித்து வம்பு வளர்த்த தனியார் பேருந்து ஓட்டுநர்; நடுரோட்டில் சம்பவம் செய்த இயக்குனர் சேரன்.!
மேக்கிங் வீடியோ: ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், அதனை முன்னிட்டு ராணுவ வீரர்களுக்கு சமர்ப்பணம் செய்யும் விதமாக அமரன் படத்தின் ஆக்ஷன் மேக்கிங் வீடியோவை தற்போது ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும் வீடியோவில் வரும் தேசபக்தி பாடலான ‘போர் செல்லும் வீரன்... ஒரு தாய் மகன் தான்... நம்மிள் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவாள்.. பாரடா’ என்கிற பாடலை கமல்ஹாசன் பாடி இருக்கிறார்.
(The above story first appeared on LatestLY on Aug 14, 2024 03:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

