Actor Naga Chaitanya - Sobhita Dhulipala Engagement: நடிகர் நாக சைதன்யா - சோபிதா திருமணம்; தம்பதிகளுக்கு குவியும் வாழ்த்துக்கள்.!
முதல் மனைவியை விவாகரத்து செய்த 3 ஆண்டுகள் கழித்து, நடிகர் நாக சைதன்யா சக நடிகையான சோபிதாவை திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையை தொடங்கி இருக்கிறார்.
ஆகஸ்ட் 08, விசாகப்பட்டினம் (Cinema News): தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து, தெலுங்கு திரையுலகில் நடிக்கச்சென்று பின்னாளில் பிரபல முன்னணி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை (Naga Chaitanya) திருமணம் செய்து வாழ்க்கையை தொடங்கியவர் நடிகை சமந்தா (Samantha). திருமணம் முடிந்த 3 ஆண்டுகளுக்கு பின், தம்பதிகள் தங்களுக்கு இடையே எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021ல் புரிவதாகவும் அறிவித்தனர். Thangalaan Audio Launch: நடிகர் விக்ரமிடம் மேடையில் மன்னிப்பு கேட்ட இயக்குனர் பா. ரஞ்சித்; நெகிழ்ந்துபோன சியான்.. நெகிழவைக்கும் தங்கலான் இசை வெளியீட்டு விழா.!
சைதன்யா - சோபிதா தம்பதி திருமணம்:
இதனையடுத்து, தெலுங்கு திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக இருந்து வந்த நடிகர் நாக சைதன்யா, 3 ஆண்டுகள் திருமணம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருந்து வந்தார். இதனிடையே, நாக சைதன்யாவும், பிரபல நடிகையும் சோபிதா துளிபலாவும் (Sobhita Dhulipala) திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இன்று இவர்களின் திருமண நிச்சயம் தனிப்பட்ட முறையில் எளிமையாக நடைபெற்று முடிந்தது.
குவியும் வாழ்த்துக்கள்:
இந்த தகவலை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இருக்கும் நடிகர் நாகர்ஜுனா, தனது மகன் மற்றும் மருமகள் நீடூடி வாழவும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சைதன்யா, தெலுங்கு, தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக அடையாளம் பெற்ற சோபிதாவை மணந்துள்ளார். தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
கணவரை பிரிந்தபின் நடிகை சமந்தா திருமணம் குறித்த எந்த முடிவையும் எடுக்காமல், அவரின் திரைப்படங்களில் நடிப்பதை கவனமாக கொண்டுள்ளார். மேலும், அவர் அறிய வகை நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சையும் பெற்று வருகிறார்.
"We are delighted to announce the engagement of our son, Naga Chaitanya, to Sobhita Dhulipala, which took place this morning at 9:42 a.m.!!
We are overjoyed to welcome her into our family.
Congratulations to the happy couple!
Wishing them a lifetime of love and happiness. 💐… pic.twitter.com/buiBGa52lD
— Nagarjuna Akkineni (@iamnagarjuna) August 8, 2024
(The above story first appeared on LatestLY on Aug 08, 2024 01:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

