Vidamuyarchi Trailer: "கொஞ்ச நாளாவே என் உலகம் என்ன சுத்தி நொறுங்கிக்கிட்டு இருக்க" அஜித் நடிப்பில் மாஸான விடாமுயற்சி பட டிரைலர்.!

நடிகர் அஜித் நடிப்பில் வெளிவர இருக்கும் விடாமுயற்சி படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Vidamuyarchi Trailer:
Vidamuyarchi (Photo Credit: YouTube)

ஜனவரி 16, சென்னை (Cinema News): தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் (Ajith Kumar), மகிழ் திருமேனி (Magizh Thirumeni) இயக்கத்தில் விடாமுயற்சி (Vidaa Muyarchi) என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசான்ட்ரா, உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

குட் பேட் அக்லி:

இந்த படத்திற்கு பின், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், குட் பேட் அக்லி (Good Bad Ugly) படத்தில் இணைந்துள்ளார். தொடர்ந்து ஹைதராபாத்தில் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்தது. மேலும், இப்படம் இந்தாண்டு தமிழ் புத்தாண்டுக்கு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், இந்த படத்தில் நடிகர் பிரசன்னா நடிக்கின்றார் என அவரே கூறியுள்ள நிலையில் படத்தின் மேல் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. Bigg Boss Tamil Season 8: கலங்கிய ஜாக்குலின்.. ரூ.2 இலட்சம் பணத்தை கைப்பற்றினாரா பவித்ரா? திக்., திக்., நொடிகள்..!

விடாமுயற்சி டிரைலர்:

இந்நிலையில் விடாமுயற்சி பட அப்டேட்டை பார்த்து காத்திருந்தவர்களின் தாகத்தை தணிக்கும் வகையில், அப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. “கடவுளே அஜித்தே” என்ற வார்த்தையை போலவே, பின்னணி இசை அமைத்திருப்பதாக சிலர் கூறி வருகின்றனர். ’விடாமுயற்சி’ பிரபல ஹாலிவுட் படமான ’பிரேக்டவுன்’ படத்தின் ரீமேக் என்ற விஷயம் வெளியாகியிருக்கிறது. மேலும் படத்தினை வரும் பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாகிறது. இந்தத் தகவல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விடாமுயற்சி படத்தின் ஓடிடி உரிமத்தை நெட் பிளிக்ஸ் நிறுவனம் வாங்கிய்தாக இன்றுதான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது.

விடாமுயற்சி டிரைலர்:

(The above story first appeared on LatestLY on Jan 16, 2025 06:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).