Kanguva: நவம்பர் 14 அன்று கங்குவா திரைப்படம் வெளியீடு; படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

திரை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கங்குவா திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் துள்ளல் மகிழ்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

Kanguva: நவம்பர் 14 அன்று கங்குவா திரைப்படம் வெளியீடு; படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
Kanguva Poster (Photo Credit: @StudioGreen2 X)

செப்டம்பர் 19, சென்னை (Cinema News): சிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர்கள் சூர்யா, பாபி டியோல், திஷா பதானி, நடராஜன், ஜெகபதி பாபு, யோகி பாபு, கோவை சரளா, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், கே.எஸ் ரவிக்குமார் உட்பட பலர் நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா (Kanguva). கேஇ ஞானவேல் ராஜா தயாரிப்பில், வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் படம் உருவாகியுள்ளது. ஐமேக்ஸ் தரத்தில், ரூ.300 கோடி செலவில் உருவாகி இருக்கும் கங்குவா படத்தில், நடிகர் சூர்யா பல கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். Jani Master's Case: டான்ஸ் மாஸ்டர் ஜானி மீது பாலியல் புகார்.. தெலுங்கு இயக்குனர் சங்கத்தின் பொறுப்பில் இருந்து நீக்கம்..!

கங்குவா ரிலீஸ்:

ஐமேக்ஸ் 3டி தொழில்நுட்ப முறையில் வெளியாகும் இப்படம், தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உட்பட 38 மொழிகளில் வெளியாகிறது. சர்வதேச அளவில் கங்குவா திரைப்படம் தான், தமிழ் மொழிப்படங்களில் வெளியீடுக்கு முன்பே பலகோடி வருமானத்தை பெற்றதும் ஆகும். இந்நிலையில், கங்குவா திரைப்படம் நவம்பர் மாதம் 14 ம் தேதி வெளியாகும் என படத்தயாரிப்பு குழுவான ஸ்டுடியோ கிரீன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் வெளியீட்டுக்காக கங்குவா படத்தின் திரைப்படம் வெளியிடும் தேதி மாற்றி வைக்கப்பட்ட நிலையில், நவம்பர் மாதம் 14 ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு:

(The above story first appeared on LatestLY on Sep 19, 2024 11:29 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).