Vijayakant: விஜயகாந்தின் ஏஐ உருவம்; கோட் திரைப்படத்தில் ரசிகர்களுக்கு இன்ப விருந்து.! அசத்தல் அப்டேட் இதோ.!

மறைந்த நடிகர் விஜயகாந்தின் ஏஐ உருவம் படத்தில் இடப்பெற தங்களின் அனுமதி வேண்டும் என பிரேமலதா தரப்பு கோரிக்கை வைத்த நிலையில், அவை சுமூகமாக தீர்த்து வைக்கப்பட்டுள்ளதாக களநிலவரங்கள் தெரிவிக்கின்றன.

Vijayakant: விஜயகாந்தின் ஏஐ உருவம்; கோட் திரைப்படத்தில் ரசிகர்களுக்கு இன்ப விருந்து.! அசத்தல் அப்டேட் இதோ.!
Actor Vijay at Vijayakant Home (Photo Credit: @igtamil X)

ஆகஸ்ட் 25, சென்னை (Cinema News): இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர்கள் விஜய், மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், பிரசாந்த், பிரபுதேவா, நிதின் சத்யா, அஜ்மல், பிரேம்ஜி, வைபவ், பார்வதி நாயர், யோகிபாபு உட்பட பலர் நடிக உருவாகி வரும் திரைப்படம் 'கோட்' (GOAT). ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் படம் தயாராகி இருக்கிறது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள விசில்போடு, சின்ன சின்ன கண்கள் ஆகிய பாடல்கள் விஜயாள் பாடப்பட்ட நிலையில், அவை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. Kamal Haasan: "ஈகையும் வீரமும் இதயத்தில் ஏந்திய நண்பரின் நினைவுகள்" - விஜயகாந்தை புகழ்ந்த நடிகர் கமல் ஹாசன்.! 

விஜய் - பிரேமலதா நேரில் சந்திப்பு:

கோட் திரைப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் மாதம் 05ம் தேதி திரையரங்கில் வெளியாக விறுவிறுப்புடன் பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்தின் டிரைலர் காட்சிகளும் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. இதனிடையே, கோட் திரைப்படத்தில் நடிகர் விஜயகாந்தின் காட்சிகள் ஏஐ தொழில்நுட்பத்தின் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்தது. விஜயகாந்தின் படத்தை தங்களின் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்த கூடாது என பிரேமலதா விஜயகாந்த் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்ட நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான கோட் திரைபடக்குழு பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரின் மகன்களை நேரில் சந்தித்தது. அப்போது மேற்கூறிய விபரம் தொடர்பாகவும் பேசி முடிக்கப்பட்டு இருக்கலாம் எனவும் தெரியவருகிறது.

(The above story first appeared on LatestLY on Aug 15, 4385 05:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).