Jyothika Returns To Bollywood: தீவிர உடற்பயிற்சியில் ஜோதிகா.. அட 25 ஆண்டுகளுக்குப் பிறகு பாலிவுட்டில் என்ட்ரினா சும்மாவா..!

நடிகை ஜோதிகா கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு பிறகு ஹிந்தி சினிமாவில் களமிறங்கி இருக்கிறார்.

Jyothika Returns To Bollywood: தீவிர உடற்பயிற்சியில் ஜோதிகா.. அட 25 ஆண்டுகளுக்குப் பிறகு பாலிவுட்டில் என்ட்ரினா சும்மாவா..!
Jyothika (Photo Credit: Instagram)

மார்ச் 06, மும்பை (Cinema News): நடிகை ஜோதிகா (Jyothika|) சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பின்னர் சினிமாவிலிருந்து விலகிக் கொண்டார். பின்னர் குழந்தைகள் சற்று பெரியவர்கள் ஆனவுடன் மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து பெண்களை மையப்படுத்திய படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் தற்போது மலையாளம், இந்தியென முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக இணைந்து நடித்து வருகிறார். Stop Pooja-Archana During Court Programs: நீதிமன்ற நிகழ்ச்சிகளின் போது பூஜை, அர்ச்சனையை நிறுத்த வேண்டும்... நீதிபதி அபய் எஸ் ஓகா கோரிக்கை..!

அதன்படி இந்தியில் அஜய் தேவ்கன், மாதவன் உடன் சைத்தான் (Shaitaan) என்ற படத்தில் நடித்து வருகிறார். அதற்கு ஏற்றவாறு தனது உடம்பையும் கட்டுக்கோப்பாக மாற்ற கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அவர் வெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் படிக்கட்டில் தாவி தாவி போவது, தலைகீழா தொங்குவது, வெயிட்டை தூக்குவது என ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளார். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Jyotika (@jyotika)

(The above story first appeared on LatestLY on Mar 06, 2024 02:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).