Malika Rajput Suicide: பிரபல பாடகி மல்லிகா ராஜ்புத் தற்கொலை.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

நடிகையும், பிரபல பின்னணி பாடகியுமான மல்லிகா ராஜ்புத் என்ற விஜயலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Malika Rajput (Photo Credit: @TrueScoopNews X)

பிப்ரவரி 14, உத்தரப் பிரதேசம் (Uttar Pradesh): மலிகா ராஜ்புத் (Malika Rajput) என்ற பெயரால் அறியப்பட்ட பாடகியும் நடிகையுமான விஜய் லட்சுமி, உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தில் உள்ள கோட்வாலி நகரில் உள்ள அவரது வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தார். நேற்று மாலை அவரது அறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் மலிகாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து பாடகி மல்லிகா ராஜ்புத் தாய் சுமித்ரா சிங் கூறுகையில், " நாங்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்ததால், மல்லிகாவின் மரணம் எப்போது நடந்தது என்று தெரியவில்லை. அத்துடன் அவள் இருந்த அறையின் கதவு உள் பக்கமாக மூடப்பட்டிருந்தது. மேலும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. நான் நீண்ட நேரமாக கதவைத் தட்டியும் திறக்காததால், ஜன்னல் வழியாகப் பார்த்தேன், அப்போது அவள், தூக்கில் தொங்கியபடி இருந்தாள். உடனே நான் என் கணவரையும் மற்றவர்களையும் அழைத்தேன்" என்று கூறியுள்ளார். Hero Maverick 440: செம பைக்கை அறிமுகப்படுத்திய ஹீரோ.. இவ்வளவு குறைவா..!

இதுகுறித்து கோட்வாலி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இது தற்கொலை போலத்தான் தெரிகிறது. ஆனாலும், உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்த பிறகே மல்லிகா தற்கொலை செய்தாரா எனத் தெரிய வரும் என்றனர்.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement