Priyanka Mohan: திடீரென சரிந்த மேடை.. தொப்பென்று விழுந்த பிரியங்கா மோகன்.. என்ன ஆச்சு? வைரலாகும் வீடியோ.!

நடிகை பிரியங்கா மோகன் விபத்தில் சிக்கி சிறிய காயங்களுடன் உயிர் தப்பியதாக தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Priyanka Mohan: திடீரென சரிந்த மேடை.. தொப்பென்று விழுந்த பிரியங்கா மோகன்.. என்ன ஆச்சு? வைரலாகும் வீடியோ.!

அக்டோபர் 04, தொரூர் (Cinema News): தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வருபவர் நடிகை பிரியங்கா மோகன். இவர் தெலங்கானா மாநிலம் தொரூரில் உள்ள கசம் ஷாப்பிங் மால் திறப்பு விழாவில் கலந்துக் கொண்டிருந்தார். அவருடன் தெலங்கானா காங்கிரஸ் எம்.எல்.ஏ யாசஸ்வினியின் தாயார், தெலங்கானா காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் ஹனுமண்டலா ஜான்சி ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, விழா நடந்துகொண்டிருக்கும் போதே மேடை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. பின்பு அவர் கூட்ட நெரிசலுக்கு இடையே பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டார். இது அங்கு பரபரப்பை கிளப்பியது. Samantha Ruth Prabhu: "எனது விவாகரத்து தனிப்பட்ட விஷயம்.. அதில் அரசியல் சதி இல்லை" அமைச்சரிடம் கோபத்தைக் கக்கிய நடிகை சமந்தா..!

இதுதொடர்பாக நடிகை பிரியங்கா மோகன் தனது எக்ஸ் தளத்தில், “இன்று தொரூரில் நான் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் சிறிய விபத்து ஏற்பட்டது. நான் நலமாக இருக்கிறேன். நல்வாய்ப்பாக சிறு காயங்களுடன் நான் தப்பித்தேன் என்பதை எனது நலம் விரும்பிகளுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் வேகமாக குணமடைய பிரார்த்திக்கிறேன். அன்பு மற்றும் அக்கறையின் காரணமாக நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.

மேடை உடைந்து நடிகை பிரியங்கா மோகன் கீழே விழுந்து காயம்:

(The above story first appeared on LatestLY on Oct 04, 2024 12:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).