Varalaxmi Sarathkumar Reception: "டும்டும் கல்யாணம்.. டும்டும் கல்யாணம்.." வரலட்சுமி, நிக்கோலாய் திருமண வரவேற்பு..!

அரசியல் பிரமுகர்களும், திரையுலக பிரபலங்களும் கலந்துகொள்ளும்வகையில் வரலட்சுமி, நிக்கோலாய் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடந்தது.

Varalaxmi Sarathkumar Reception:
Varalaxmi Sarathkumar Wedding (Photo Credit: @CinemaniaIndia X)

ஜூலை 04, சென்னை (Cinema News): பிரபல நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி சரத்குமார் (Actress Varalaxmi Sarathkumar), தன்னுடைய காதலரான நிக்கோலாய் சச்தேவை (Nichola) திருமணம் செய்து கொண்டார். இருவீட்டார் சம்மதத்துடன் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இவர்களது திருமணம் நேற்று முன்தினம் தாய்லாந்தில் நடைபெற்றது. இதனையடுத்து திருமண வரவேற்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. UK Election 2024: பிரிட்டன் பொதுத் தோ்தல்.. ஆட்சியைப் பிடிக்க போவது யார்?.!

திருமண வரவேற்பு: இதில் ஏராளமான திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டு திருமண ஜோடியை வாழ்த்தியுள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எம்.பி. தயாநிதி மாறன், பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை, இயக்குநர் பாலா, நடிகர் ஜீவா, தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி, நடிகை ஆண்ட்ரியா, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் சிவக்குமார், எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா, சுந்தர்.சி, குஷ்பூ, நடிகை ரோஜா, இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, இயக்குநர் ஹரி, நடிகர் விஜயகுமார், நடிகர் பாலகிருஷ்ணா, இயக்குநர் ஏ.எல்.விஜய், விஜயகாந்த்தின் மகன் சண்முக பாண்டியன், மணிரத்னம், சுஹாசினி உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

(The above story first appeared on LatestLY on Jul 04, 2024 06:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).