Demonte Colony 2: ஆகஸ்ட் 15ல் திரையை மிரட்ட வருகிறது டிமாண்டி காலனி 2 திரைப்படம்; திகில் பிரியர்களுக்கு கொண்டாட்ட செய்தி.!

திகில் படங்களின் மீதான எதிர்பார்ப்பு எப்போதும் குறையாத வகையில் இருக்கின்றன. அவ்வாறாக வெளியாகும் படங்களுக்கு கிடைக்கும் வெற்றியே, திகில் படங்களின் கொண்டாட்டமாக அமைகிறது.

Demonte Colony 2: ஆகஸ்ட் 15ல் திரையை மிரட்ட வருகிறது டிமாண்டி காலனி 2 திரைப்படம்; திகில் பிரியர்களுக்கு கொண்டாட்ட செய்தி.!
Demonte Colony (Photo Credit: @Instagram)

ஜூலை 24, சென்னை (Cinema News): கடந்த 2015 ஆம் ஆண்டு இயக்குனர் ஆர். அஜய் ஞானமுத்து (R. Ajay Gnanamuthu) இயக்கத்தில், நடிகர்கள் அருள்நிதி (Arulniti), ரமேஷ் திலக், அபிஷேக், ஜோசப் ஜார்ஜ் உட்பட பலர் நடிக்க வெளியான திகில் திரைப்படம் டிமாண்டி காலனி (Demonte Colony). ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட பழைய கட்டிடம் ஒன்றுக்கு செல்லும் நபர்கள் சந்திக்கும் பிரச்சனை மற்றும் அவர்களுக்கு நடக்கும் அமானுஷ்ய விஷயங்கள் தொடர்பாக பரபரப்பு கதை அம்சத்துடன் கொண்ட டிமாண்டி காலனி திரைப்படம், அன்று மிகப்பெரிய அளவில் வெற்றியை அடைந்தது. இப்படம் ரூபாய் 2 கோடி பொருட்செலவில் தயாரான நிலையில், படத்திற்கு கிடைத்த வரவேற்பு காரணமாக ரூ.17 கோடி வரை வசூல் செய்தது. Surya 44: வாயில் சிகிரெட்டுடன் கெத்தாக லுக் விட்ட சூர்யா; சூர்யா 44 படத்தின் அசத்தல் அப்டேட் இதோ.! 

டிமாண்டி காலனி 2:

இந்த இமாலய வெற்றியைத்தொடர்ந்து, டிமாண்டி காலனி (Demonte Colony 2) படத்தின் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்தது. கடந்த 2023ம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்புடன் நடைபெற்று வந்தது. இரண்டாம் பாகத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருள் பாண்டியன், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிச்சந்திரன் உட்பட பலரும் நடித்துள்ளனர். படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார், ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு பணிகளையும், குமரேஷ் எடிட்டிங் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்.

திகில் காட்சிகளுடன் திரையை மிரட்ட வரும் இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று வெளியாவதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. அந்த வகையில், படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி திரைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று மாலை 5 மணியளவில் படத்தின் புதிய டிரைலர் காட்சி ஒன்றும் வெளியிடப்பட உள்ளது.

7 மாதங்களுக்கு முன் வெளியான டிரைலர்:

(The above story first appeared on LatestLY on Jul 24, 2024 11:54 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).