Deepika Padukone, Ranveer Singh Announce Pregnancy: கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த தீபிகா படுகோனே.. மெய்சிலிர்த்து போன ரசிகர்கள்..!
பாலிவுட்டின் நட்சத்திர ஜோடி நடிகை தீபிகா படுகோனே- ரன்வீர் சிங் ஜோடிகளுக்குத் திருமணம் முடிந்து ஐந்து வருடங்கள் கடந்துள்ள நிலையில், தீபிகா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார்.
பிப்ரவரி 29, டெல்லி (Cinema News): பாலிவுட் திரையுலகின் மிகவும் பிரபலமான ஜோடிகள் தான் ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் தம்பதி. இவர்கள் இருவரும் சஞ்சய் லீலா பன்சாலியின் 'கோலியோன் கி ராஸ்லீலா ராம்-லீலா' படப்பிடிப்பில் சந்தித்து காதலித்தனர். ஃபைண்டிங் ஃபேன்னி, பத்மாவத் மற்றும் பாஜிராவ் மஸ்தானி ஆகிய படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர். 6 ஆண்டு காதல் பயணத்திற்குப் பிறகு, 2018 ஆம் ஆண்டில் திருமணம் செய்துக் கொண்டனர். தற்போது இந்த ஜோடிகளுக்குத் திருமணம் முடிந்து ஐந்து வருடங்கள் கடந்துள்ள நிலையில், தீபிகா கர்ப்பமாக இருப்பதாக தந்து இன்ஸ்டாவில் அறிவித்துள்ளார். Texas Wildfires: அமெரிக்காவின் வடக்கு டெக்சாஸில் பரவும் காட்டுத்தீ.. பேரழிவில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள்..!
சமீபத்தில் இந்த ஆண்டிற்கான பாஃப்டா விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு வந்த நடிகை தீபிகா தனது வயிற்றுப் பகுதியை பெரும்பாலும் மறைத்தபடியே இருந்தார். இதைப் பார்த்துவிட்டு, தீபிகாவின் வயிற்றுப் பகுதி பார்ப்பதற்கு கர்ப்பமாக இருப்பது போலவே தோற்றமளிப்பதாக ரசிகர்கள் தங்கள் ஊகங்களை இணையவெளியில் பரப்பியது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
(The above story first appeared on LatestLY on Feb 29, 2024 11:16 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

