Idly Kadai Release Date: தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’.. எப்போது ரிலீஸ் தெரியுமா?!
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள இட்லி கடை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 08, சென்னை (Cinema News): தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருபவர் தனுஷ் (Dhanush). அவர் நடிப்பில் தற்போது டஜன் கணக்கிலான படங்கள் உருவாகி வருகின்றன. அதுமட்டுமில்லாமல் படங்களை இயக்கியும் வருகிறார். 'பவர் பாண்டி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் தனுஷ். அண்மையில் வெளியான அவரது 50-வது படமான 'ராயன்' படத்தையும் அவரே இயக்கினார். 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தையும் இயக்கி முடித்துள்ளார். அடுத்ததாக இட்லி கடை (Idly Kadai) என்ற படத்தையும் இயக்கி வருகின்றார். IIFA Utsavam 2024: “காமெடி சாம், சர்ச்சைக்குரிய சாம்… அவள் தூங்கப் போய்விட்டாள்..” சமந்தாவின் துணிச்சலான வைரல் வீடியோ..!
இட்லி கடை: தனுஷ், அருண் விஜய், நித்யா மேனன், சத்யராஜ், ராஜ்கிரண் ஆகியோர் நடித்து வரும் இட்லி கடை திரைப்படம் பீல் குட் படமாக தயாராகி வருகின்றது. இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தேனியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை தற்பொழுது படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் அடுத்தாண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
'இட்லி கடை' படத்தின் அப்டேட்:
#idlikadai release announcement pic.twitter.com/iNKNmfridz
— Dhanush (@dhanushkraja) November 8, 2024
(The above story first appeared on LatestLY on Nov 08, 2024 11:57 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

