Vijay Antony's Romeo Movie Trailer: "பால் சொம்புடன் விஜய் ஆண்டனி, சரக்கு மிக்சிங்கில் நாயகி" - முதலிரவு செட்டப்பில் குதூகலமாக வெளியானது ரோமியோ படத்தின் டிரைலர்.!
விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரோமியோ படத்தின் டிரைலர் தற்போது வெளியானது.
மார்ச் 25, சென்னை (Cinema News): நடிகர் விஜய் ஆண்டனி (Vijay Antony) தற்போது, ‘ ரோமியோ ’ (Romeo) என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அறிமுக இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் (Vinayak Vaidyanathan) இப்படத்தை இயக்கியிருக்கிறார். நடிகர் தலைவாசல் விஜய், நடிகை மிருணாளினி ரவி (Mrinalini Ravi) ஆகியோர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். ரமலான் பண்டிகையை முன்னிட்டு இத்திரைப்படம் திரைக்கு வருகிறது. விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், மீரா விஜய் ஆண்டனி வழங்கும் ‘ரோமியோ’ திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றுள்ளது.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்: இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. தெலுங்கில் லவ் குரு என்ற தலைப்பில் திரைக்கு வருகிறது. மேலும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜனவரி 30 ஆம் தேதி வெளியானது. அதில் முதல் இரவு காட்சியில் விஜய் ஆண்டனி கையில் சொம்பும் மிருணாளினி ரவி கையில் மதுவும் வைத்திருந்த புகைப்படம் இடம்பெற்றிருந்தது. Mango Halwa Recipe: தித்திக்கும்... மாம்பழ அல்வா.. குட்டீஸுக்கு பிடித்தவாறு செய்வது எப்படி?.!
ரோமியோ டிரைலர்: இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் ஆனது தற்போது வெளியாகியுள்ளது. காதல் மற்றும் காமெடி என கலகலப்பாய் அமைந்துள்ள இந்த டிரைலரை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.
(The above story first appeared on LatestLY on Mar 25, 2024 08:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

