Weapon Public Review: தமிழில் வெளியான சூப்பர் ஹியூமன் படம்.. மக்களின் கருத்தை நேரடியாக திரையரங்கிற்கே சென்று கேட்டறிந்த நடிகர்.. வைரலாகும் வீடியோ..!
சத்யராஜ், வசந்த் ரவி, தன்யா ஹோப் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள வெப்பன் படம் குறித்து மக்கள் கருத்து தெரிவிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
ஜூன் 10, சென்னை (Cinema News): ஜெயிலர் படத்தை தொடர்ந்து வசந்த் ரவி (Vasanth Ravi) நடித்துள்ள திரைப்படம் தான் வெப்பன் (Weapon). இந்த படத்தில் சூப்பர் ஹியூமனாக நடிகர் சத்யராஜ் நடித்துள்ளார். ஹீரோயினாக தன்யா ஹோப் நடித்துள்ளார். மேலும், குகன் சென்னியப்பன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ராஜீவ் மேனன் வில்லனாக நடித்துள்ளார். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் எம் எஸ் மன்சூர் தனது 'மில்லியன் ஸ்டூடியோ' நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். Amol Kale Dies: மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவர் அமோல் கேல் மறைவு.. இந்தியா-பாகிஸ்தான் போட்டியைப் பார்க்கச் சென்ற போது நடந்த துயரம்..!
வெப்பன்: குழந்தை ஒன்று விபத்தில் இருந்து காப்பாற்றப்படுவதை டிவியில் பார்க்கிறார் இயற்கை ஆர்வலர் யூ டூபர் வசந்த் ரவி. இதற்குப் பின்னால் சூப்பர் ஹியூமனின் சக்தி இருப்பதை உணர்கிறார். இந்த சூப்பர் ஹியூமனைத் தேடிச் செல்கிறார். யார் இந்த சூப்பர் பவர் ஹியூமன்? இவருக்கும் வசந்த் ரவிக்கும் என்ன தொடர்பு என்பதுதான் இந்த வெப்பன் படம். இப்படம் பார்த்த ரசிகர்கள் தியேட்டர் விட்டு வரும் போது அவர்களை வசந்த் ரவி சந்தித்து நேரடியாக பேசியுள்ளார். அப்போது பார்த்து வெளிவந்த மக்கள் அனைவரும் படம் நன்றாக இருப்பதாக தெரிவித்தனர். தற்போது இந்த வீடியோ தான் இணையம் முழுதும் வைரலாகி வருகிறது.
Real public response🥳 for our movie🎬 #WEAPON which speaks the reality what the movie is #letsgetweaponised🔥🔥#publicreview #tamilmovie #weaponmovie #vasanthravi #sathyaraj #moviereview #tamilcinema @MillionStudioss@Abdulkaderoffl@manzoorms#Sathyaraj @GuhanSenniappan pic.twitter.com/c5xODU5Igx
— Million Studio (@MillionStudioss) June 10, 2024
(The above story first appeared on LatestLY on Jun 10, 2024 06:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

