Indian 2 First Single Paaraa Out: இந்தியன் 2 படத்தின் “பாரா” பாடல் வெளியீடு.. ஆண்டவர் தரிசனத்தால் துள்ளிகுதிக்கும் ரசிகர்கள்..!

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான பாரா பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

Indian 2 First Single Paaraa Out: இந்தியன் 2 படத்தின் “பாரா” பாடல் வெளியீடு.. ஆண்டவர் தரிசனத்தால் துள்ளிகுதிக்கும் ரசிகர்கள்..!
Indian 2 (Photo Credit: @sureshsubrama14 X)

மே 22, சென்னை (Cinema News): ஆண்டவர் என்றழைக்கப்படும் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான படம் இந்தியன் (Indian). கமல் 2 வேடங்களில் நடித்த இந்த படத்தில் சுகன்யா, மனிஷா கொய்ராலா, செந்தில் கவுண்டமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்நிலையில் பல ஆண்டுகள் கழித்து அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை தற்பொழுது எடுத்து முடித்திருக்கிறார் இயக்குனர் சங்கர். இந்த இந்தியன் 2 (Indian 2) திரைப்படம் வருகின்ற ஜூலை மாதம் 12ஆம் தேதி உலக அளவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Cyclone Alert: இந்தியாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை.. மீனவர்கள் கரைக்கு திரும்புமாறு எச்சரிக்கை..!

இந்தியன் 2: இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதனிடையே இந்தியன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான பாரா (First Single Paaraa) பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் வீடியோவில் கமல்ஹாசன் குதிரையில் வளரி கத்தியை எடுத்துக்கொண்டு வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அனிருத் இசையமைத்து இந்த பாடலை பாடியுள்ளார். தற்போது வெளியாகியுள்ள இந்த பாடல் கூஸ்பம்ஸ் கொடுப்பதாக கமல் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

(The above story first appeared on LatestLY on May 22, 2024 05:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).