GV Prakash Kumar And Saindhavi Announce Divorce: பிரிந்த பிறை தேடும் இரவிலே ஜோடி.. முடிவுக்கு வந்த 11 வருட மண வாழ்க்கை..!
பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜி.வி. பிரகாஷ் குமார் தனது மனைவி சைந்தவியை விவாகரத்து செய்துள்ளது கோலிவுட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மே 14, சென்னை (Chennai): தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ். தொடர்ந்து பல படங்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்தார். இவர் தன்னைவிட இரண்டு வயது இளைய பெண்ணான சைந்தவியை, 10ம் வகுப்பு படித்து வந்த காலத்திலிருந்தே காதலித்து வந்தார். பாடகி சைந்தவி, கடந்த 2013 ஆம் ஆண்டு ஜிவி பிரகாஷை (G.V.Prakash Kumar, Saindhavi) காதல் திருமணம் செய்து கொண்டார். கடந்த 11 ஆண்டுகளாக மிகவும் சந்தோஷமான ஜோடியாக அவர்கள் வாழ்ந்து வந்தனர். Earthquake Near Guatemala-Mexico Border: அமெரிக்காவின் மெக்சிகோ மாகாணத்தில் திடீரென நிலநடுக்கம்.. சாலைகளுக்கு ஓடி வந்த மக்கள்..!
இந்நிலையில், 11 வருட காதல் திருமண வாழ்க்கையை திடீரென இருவரும் முறித்துக் கொள்வதாக நேற்று அறிவித்தது ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ், சைந்தவி இருவரும் தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். "சைந்தவியும் நானும் திருமணமாகி 11 ஆண்டுகளுக்குப் பின், நீண்ட யோசனைக்குப் பிறகு ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதையுடன் எங்கள் மன அமைதிக்காகவும் மேம்பாட்டுக்காகவும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். இந்தத் தருணத்தில், எங்கள் தனி மனித சுதந்திரத்தைப் புரிந்துகொண்டு மதிக்குமாறு ஊடகங்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் தனித்தனியாக வளர்ந்து கொண்டிருப்பதை மனதில் கொண்டு, இது எங்கள் இருவருக்கும் சிறந்த முடிவாக இருக்கும் என்று நம்புகிறோம். இந்த கடினமாக காலகட்டத்தில் உங்களுடைய புரிதலும் ஆதரவும் எங்களுக்கு மிகவும் முக்கியம். நன்றி” எனப் பகிர்ந்துள்ளனர்.
(The above story first appeared on LatestLY on May 14, 2024 11:22 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

