செப்டம்பர் 04, சென்னை (Cinema News): நடிகர் விஜய் (Thalapathy Vijay) தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப் பெரிய சாதனை படைத்தது. தொடர்ந்து தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (The Greatest of All Time) படம் நடித்து முடித்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, கேரளா, தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து நடைபெற்றது. மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். Nivin Pauly: பிரேமம் புகழ் நடிகர் நிவின் பாலி மீது பாலியல் குற்றச்சாட்டு: அடுத்த அதிர்ச்சியில் மழையால் திரையுலகம்.!
தி கோட்: 3 மணி நேரம் 3 நிமிடங்கள் ரன் டைம் கொண்ட தி கோட் படம், நாளை அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்தப் படத்தில் புதுமையாக டி ஏஜிங் லுக் தொழில்நுட்பத்தை கையாண்டிருக்கிறார்கள். அதன்படி விஜய்யை ரொம்பவே இள வயதில் காண்பித்திருக்கிறார்கள். கோட் படம் தமிழ் நாடு முழுவதும் உள்ள 1,100 திரையரங்குகளிலும் சோலோவாக ரிலீஸ் ஆகவுள்ளது. பல இடங்களில் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே முடிந்துவிட்டது. இதுமட்டும் இல்லமல், பல இடங்களில் ரசிகர்கள் டிக்கெட்டிற்காக இன்னமும் அலைந்துகொண்டு உள்ளனர்.
From tomorrow #ThalapathyThiruvizha in theatres!!! #GOATreleasepromo #TheGreatestOfAllTime pic.twitter.com/nIPJeD4LpZ
— venkat prabhu (@vp_offl) September 4, 2024