Coolie Movie Character Announcement Update: கூலி படத்தில் இணைந்த மலையாள நடிகர்.. சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு ரெடியாகும் விருந்து..!

கூலி படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

Coolie Movie Character Announcement Update: கூலி படத்தில் இணைந்த மலையாள நடிகர்.. சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு ரெடியாகும் விருந்து..!
Soubin Shahir (Photo Credit: @sunpictures X)

ஆகஸ்ட் 28, சென்னை (Cinema News): ரஜினிகாந்த் (Rajinikanth) தற்போது வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். ஜெய்பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கும் இப்படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. கண்டிப்பாக சோஷியல் மெசேஜுடன் படம் உருவாகும் என்று ரஜினியின் ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். இப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை முடித்துவிட்டு ரஜினி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்கிறார்.

கூலி: இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கிறது. இப்படத்திற்கும் அனிருத் இசையமைக்க உள்ளார். தலைவர் 171 படத்திற்கு கூலி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படம் குறித்த அப்டேட்கள் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டு இருந்த நிலையில், படம் குறித்த அப்டேட்கள் இன்று முதல் அதாவது ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல், படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்படும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி இப்படத்தில் மலையாள நடிகர் சவுபின் ஷாயிர் (Malayalam actor Soubin Shahir) நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. Rekha Nair: நடிகை ரேகா நாயரின் கார் ஏறி-இறங்கியதில், சாலையில் உறங்கியவர் பரிதாப பலி.. ஓட்டுநர் கைது.!

சவுபின் ஷாயிர்: மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் சவுபின் ஷாயிருக்கு இது முதல் தமிழ்ப் படம். போஸ்டரை பொறுத்தவரை சட்டை அணியாமல், வாயில் சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டு, கையில் இருக்கும் வாட்சை பார்த்துக் கொண்டிருக்கிறார் சவுபின். அவர் கூலி படத்தில் தயாள் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் என படக்குழு தெரிவித்துள்ளது.

(The above story first appeared on LatestLY on Aug 28, 2024 06:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).