Agricultural Film: தமிழ் சினிமாவில் பெருகும் விவசாயப் படங்கள்.. கண்டிப்பா இந்த லிஸ்ட் படங்களாம் பாருங்க.!

விவசாயம் சார்ந்த திரைப்படம் என்றும், விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி என்றும் சமீபகாலமாக திரைப்பட விளம்பரங்கள் அதிகம் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

Agricultural Film (Photo Credit: Instagram)

ஜனவரி 31, சென்னை (Cinema News): தமிழில் விவசாயத்தை பற்றி பேசும் படங்களுக்கு எப்போதும் பஞ்சமில்லை. இயக்குநர்கள் தொடர்ந்து தோல்விப்படங்களைக் கொடுத்து வந்தால் ஒரு விவசாயத்தைப் பற்றி படம் எடுத்தால் போதும் மறுபடியும் அவரின் மார்கெட்டை பிடித்து விடுவர். அந்த அளவிற்கு தமிழில் வேளாண்மை பற்றிய படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. கருத்துப் படங்களில் ஒரு டயலாகாவது விவசாயத்தை பற்றி இருந்துவிடும். அதில் பல, விவசாயத்தின் உண்மை தன்மையையும் முக்கியத்துவத்தையும், சிலவை சற்று திரித்தும், மற்றவை விவசாயிகளுக்கு, கார்பரேட் நிறுவனங்கள், அரசு செய்யும் சூழ்ச்சிகள் போன்றவையை கதைகளமாக வைத்து எடுக்கப்படுகின்றன. ஒரு சிலவையே விவசாயத்தை ஊக்குவிக்கும் விதத்திலும் முக்கியத்துவத்தையும் காட்டுகின்றன. விவசாயத்தை திரையில் காட்டிய படங்கள் சிலவையை காண்போம். Baakiyalakshmi: நாடகமா இருந்தாலும் நியாயம் வேண்டாமா? - பாக்கியலட்சுமி இனியாவின் ஆட்டத்துக்கு 3ம் பரிசா? கலாய்க்கும் ரசிகர்கள்.!

கடைசி விவசாயி (Kadaisi Vivasayi):

இது வரை பல படங்கள் விவசாயத்தை பற்றி வெளியாகியிருந்தாலும் இந்த ‘கடைசி விவசாயி’ மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டது. ஒரு எளிய இயற்கை விவசாயம் செய்து வரும் வயதான விவசாயியின் வாழ்வும், அவருக்கு புரியாத சட்டங்களும் அதனால் அவருக்கு ஏற்படும் விளைவுகளும் அழகாக காட்டப்பட்டிருக்கும். படத்தில் வேளாண்மை பற்றி வரும் கருத்துகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இதில் இராசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகளால் ஏற்படும் விளைவுகளையும் இப்படம் கூறியிருப்பது மேலும் சிறப்பு. இப்படத்தை காகா முட்டை, ஆண்டவன் கட்டளை, குற்றமே தண்டனை போன்ற படங்களை இயக்கிய மு. மணிகண்டனே இயக்கியிருக்கிறார்.

கத்தி (Kaththi):

விவசாயம் பற்றிய படங்களில் அதிக வசூலைக் குவித்த படமாகவும் அனைவரிடமும் வரவேற்பு பெற்ற படமாக திகழ்கிறது விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளிவந்த ‘கத்தி’ திரைப்படம். இப்படத்தின் கருவாக, தண்ணீர் இல்லாமல் கடன் தொல்லையால் விவசாயிகளின் தற்கொலை அதிகரித்து வந்த நிலையில், தண்ணீர் இருப்பது தெரிந்து அதை வெளிநாட்டு கம்பெனியிடம் தர அரசாங்கமும் முயற்சிக்கும் அதிலிருந்து சட்ட ரீதியாக போராடி நீதி கிடைக்கும் இது கதை. இதில் விவசாயிகலின் நிலை எடுத்துக் காட்டப்படிருந்தது அனைவரிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

பூமி (Bhoomi):

ஜெயம் ரவியின் நடிப்பில் வெளிவந்த ‘பூமி’ திரைப்படம் வசூல் ரீதியிலும் விமர்சன ரீதியில் அடி வாங்கினாலும், படத்தின் கரு இப்போதைய சூழ்னிலைக்கு ஏற்றதாகவே அமைந்திருந்தது. இப்படத்தில் ஒருகிணைந்த பண்ணை அமைப்பது இயற்கை விவசாயத்தை ச்முறையாக செய்தால் வருமான வரி கட்டும் அளவிற்கு வருமானம் ஈட்டலாம் என விவசாயிகலுக்கு ஊக்கம் அளிக்கும் விதத்தில் இருக்கும். இருப்பினும் பல நடைமுறை சாத்தியமில்லாத காட்சிகளால் இப்படம் தோல்வியைத் தழுவது.

கடைகுட்டி சிங்கம் & சுல்தான் (Kadaikutty Singam & Sultan):

கார்த்தி நடிப்பி வெளிவந்த ‘கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படம், குடும்பக் கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதத்தில் இருந்தாலும் இப்படத்தில் வேளாண்மையின் மேன்மையைக் கூறும் விதத்தில் இருகிறது. அதிலும் விவசாயி என்றால் பெருமையாக நினைக்க வேண்டும் எனக் கூரும் டயலாக்குகள் இளைஞர்களை விவசாயம் செய்ய தூண்டும் விதத்திலும் இருக்கின்றது.

இதே போன்று கார்த்தியின் நடிப்பில் வெளிவந்த சுல்தான் திரைபடமும் விவசாயம் செய்வதால் கிடைக்கும் மன மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதத்திலேயே உள்ளது. Vijay Sethupathi: "நல்ல முறையில் வரி செலுத்திய குடிமகன்களுக்கு ஏதாவது சலுகைகள் வழங்க வேண்டும்" - நடிகர் விஜய் சேதுபதி..!

காப்பான் (Kaappaan):

இத்திரைப்படம் முழுக்க முழுக்க விவசாயத்தை பற்றி பேசவில்லை என்றாலும் நம் வாழ்ககைக்கு விவசாயம் எவ்வளவு முக்கியம் என்பதை விளக்குகிறது. இயற்கை முறையில் விவசாயத்தை செய்வதன் நன்மை குறித்தும் நன்மை செய்யும் பூச்சிகள் பற்றியும் மக்களுக்கு புரியும் விதத்தில் அமைத்திருப்பார்கள். உள்ளூரில் விவசாயம் அழித்தால் வெளிநாடுகளிடன் கையேந்தும் நிலை வரும் எனவும் கூறியிருப்பது எதிர்காலத்தில் வேளாண்மையின் முக்கியத்துவத்தை உணரலாம்.

வெள்ளை யானை (Vellai Yaanai):

சமுத்திரகனியின் நடிப்பில் வெளிவந்த ‘வெள்ளை யானை’ திரைப்படம், குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி, மோசடியில் சிக்கி தவிக்கும் விவசாயிகளின் கண்ணோட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. கடன் தொல்லையால் ஏற்படும் தற்கொலைகள் பற்றியும் இப்படம் பேசுகிறது. மேலும் அதை எவ்வாறு சட்ட ரீதியாக எதிர்கொள்கிறார்கள் என்பதே கதையாக அமைந்துள்ளது. இப்படத்தில் வேளாண்மையில், நிதி தேவை எவ்வளவு இருக்கிறது என்று காட்டப்பட்டுள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement