Baakiyalakshmi: நாடகமா இருந்தாலும் நியாயம் வேண்டாமா? - பாக்கியலட்சுமி இனியாவின் ஆட்டத்துக்கு 3ம் பரிசா? கலாய்க்கும் ரசிகர்கள்.!

இனியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் பெண் ஆடிய நடனத்திற்கு, எப்படி மூன்றாவது பரிசு வழங்கப்பட்டது? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Baakiyalakshmi: நாடகமா இருந்தாலும் நியாயம் வேண்டாமா? - பாக்கியலட்சுமி இனியாவின் ஆட்டத்துக்கு 3ம் பரிசா? கலாய்க்கும் ரசிகர்கள்.!
Baakiyalakshmi Iniya Troll (Photo Credit: @FilmFoodFunFact X)

ஜனவரி 30, கோடம்பாக்கம் (Television News): விஜய் தொலைக்காட்சியில் (Vijay TV) ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி ஒரு இல்லத்தரசியின் கதை (Baakiyalakshmi – oru Illatharasiyin Kadhai) தற்போது வரை 1220க்கும் மேற்பட்ட நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த நெடுந்தொடர், தமிழக மக்களின் பெரும் ஆதரவை பெற்ற நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. Karathey Babu: "என்னுடைய பழைய பேர் ஆர்.கே.நகர் மக்கள் கொடுத்தது" அரசியல் பேசும் ரவி மோகனின் 'கராத்தே பாபு' பட அப்டேட்..! 

கோபி கதாபாத்திரம்:

இந்த கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் கேஎஸ் சுசித்ரா பாக்யலட்சுமியாகவும், சதீஷ்குமார் கோபியாகவும், நந்திதா ஜெனிபர் நெனைப்பாராகவும், ரேஷ்மா பசுபுலேட்டி ராதிகாவாகவும், ரஞ்சித் உட்பட பலரும் நடித்து வருகின்றனர். கோபி என்ற கதாபாத்திரம் செய்து கொண்ட இரண்டு திருமணம் செய்த நபரால், இரண்டு பெண்களின் வாழ்க்கையில் எந்த விதமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை பற்றி கதைக்களம் விறுவிறுப்பு பெற்றுள்ளது.

நெட்டிசன்கள் கலாய்:

தற்போது இந்த தொடர் இறுதி கட்டத்தை எட்டி இருப்பதாகவும் கூறப்படும் நிலையில், சமீபத்தில் பாக்கியலட்சுமி - கோபி தம்பதியின் மகளான இனியா கல்லூரியில் நடைபெற்ற நடன நிகழ்வில் நடனம் ஆடுவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றன. அந்த போட்டியில், அவர் ஆடியோ நடனம் காரணமாக, அவருக்கு 3 ம் பரிசு வழங்கப்பட்டது. இந்த விஷயத்தை கலாய்த்து வரும் நெட்டிசன்கள், இந்த நடனத்திற்காகவா மூன்றாவது பரிசு கொடுத்தீர்கள்?. இந்த மூன்றாவது பரிசு தனக்கு முதல் பரிசாக வந்திருக்க வேண்டும் என்று இனியா வீட்டில் ரகளையை செய்துவிட்டார். இதெல்லாம் அவருக்கே பொருகதா? என கலாய்த்து வருகின்றனர்.

இனியாவின் நடனம் தொடர்பான காணொளி:

(The above story first appeared on LatestLY on Jan 30, 2025 04:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).