Vijay Sethupathi: "நல்ல முறையில் வரி செலுத்திய குடிமகன்களுக்கு ஏதாவது சலுகைகள் வழங்க வேண்டும்" - நடிகர் விஜய் சேதுபதி..!
மதுரையில் வருமான வரித்துறை சார்பில் வரி செலுத்துவோர் மைய தொடக்க விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேசினார்.
ஜனவரி 30, மதுரை (Cinema News): மதுரை வருமானவரித்துறை சார்பில் வருமானவரி செலுத்துபவர்கள் வருமாவரித்துறை தொடர்பான தகவல்களை தெரிந்துகொள்ளும்வகையில் மதுரை தமுக்கம் மைதான அரங்கில் TAXPAYERS HUB என்ற நிகழ்ச்சி வரும் 31 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான தொடக்கவிழா நிகழ்ச்சியினை நடிகர் விஜய்சேதுபதி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்.
நடிகர் விஜய் சேதுபதி உரை:
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி,” நானும் சில ஆடிட்டர்ஸ் அலுவலகத்தில் வேலைபார்த்திருக்கிறேன், வருமானவரித்துறை செலுத்துபவர்கள் வருமானவரித்துறை தொடர்பாக தகவல்கள் குறித்து தெரிந்துகொள்ள யாரை பார்ப்பது என்ற நிலை இருந்தது. இப்போது எளிமையாக தெரிந்துகொள்ளும் வகையில் எல்லோருக்கும் புரியும் வகையில் இதுபோன்ற இணையதளம் தொடங்கியுள்ளது வரவேற்பு அளிக்கும் வகையில் உள்ளது. அதிலும் கார்டூன் வடிவில் கொடுத்துள்ளது எளிமையாக சுவாரஸ்யமானது புரிந்துகொள்ளும் வகையில் உள்ளது. Parasakthi: சூப்பர் ஸ்டார் வழியில்.. சிவகார்த்திகேயன், ரவி மோகனின் 'பராசக்தி' டைட்டில் டீசர் வெளியீடு.!
பான்கார்டு அப்ளை பண்ண வேண்டுமானால் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் தான் உள்ளது. இதை நிரப்ப கடினமாக இருக்கும். தமிழிலும் இருந்தால் அது பார்த்தவுடன் புரிந்துகொள்ள வசதியாக இருக்கும். நீங்க இதை தொடங்குவதே இது எளிமையாக செல்ல வேண்டும் என்ற முயற்சிதான், பிரச்னை வரும்போது அதுபற்றி முன்னதாகவே விளக்கமும் தெளிவும் வேண்டும். அது நமக்கு புரியும் மொழியில் இருந்தால் தான் தெளிவாக இருக்கமுடியும், இல்லையெனில் மறுபடியும் ஒருத்தரை சார்ந்து இருக்க கூடிய நிலை உருவாகும், வருமானவரித்துறையினர் இந்த முயற்சி அற்புதமானது.
நமது உரிமைக்காக அரசிடம் எந்தளவுக்கு கோரிக்கை வைக்கிறோமோ, அந்தளவுக்கு வரி செலுத்துவதும் அவசியம். அது நமது கடமை என நம்பு கிறேன். ரொம்ப நாளாக என் மனதில் ஒரு கோரிக்கை உள்ளது. ஒரு காலத்தில் நன்றாக சம்பாதித்து வரி செலுத்தி இருப் போம். ஒரு கட்டத்தில் செலுத்த முடியாத நிலை உருவாகும். எனவே நல்ல முறையில் வரி செலுத்திய குடிமகன்களுக்கு ஏதாவது சலுகைகள் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சியை தொடங்கியது மிக்க மகிழ்ச்சி" இவ்வாறு அவர் பேசினார்.
(The above story first appeared on LatestLY on Jan 30, 2025 04:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

