Underrated Music Directors: லியோன் ஜேம்ஸ் முதல் கோவிந்த் வசந்தா வரை.. இசையில் குறைப்பு மதிப்பிடப்படுவர்கள்.. லிஸ்ட் இதோ.!
பல திறமையான இசையமைப்பாளர்களும் தங்கள் பாடல் ஹிட்டாகி நிலைக்கும் அளவிற்கு அவர்களின் பெயர்கள் நிலைக்கவில்லை.
ஜனவரி 29, கோடம்பாக்கம் (Cinema News): சினிமா ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த ஹீரோக்களின் படங்கள் மொக்கையாக இருந்தாலும் அதை கொண்டாடுவது வழக்கம் தான். புது முகங்கள் அல்லது வளர்ந்து வரும் ஹீரோக்களில் படங்கள் அவர்களை கவர்ந்தால் மட்டுமே பேசப்படும் நல்ல திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் ரசிகர்களிடம் அங்கிகாரம் கிடைப்பதில்லை. அது போல பல தமிழ் ஹீரோக்கள் நல்ல வெற்றிப்படங்களைக் கொடுத்திருந்தாலும் ராசிகர்களால் கொண்டாட்டப்படுவதில்லை. இசையமைப்பாளர்கள் (The Underrated Composer) பலரும் இது போலவே இருக்கின்றனர்.
லியோன் ஜேம்ஸ் (Leon James):
3 வயதிலிருந்து பியானோ கற்றுக்கொண்டு இசைத்துரையில் இருந்து வரும் லியோன் ஜேம்ஸ், காஞ்சனா 2, கோ 2, சிலுக்குவார்பட்டி சிங்கம், கவலை வேண்டாம், வீரா, எல்ஜிகே, ஓ மை கடவுளே போன்ற படங்களுக்கு மியூசிக் அமைத்துள்ளார். மேலும் பல பாடல்களுக்கு ஏஆர் ரகுமான் மற்றும் அனிருத்துடனும் இணைந்து பணியாற்றியிருக்கிறார்.
ஜிப்ரான் (Ghibran):
கோயம்புத்தூரை சேர்ந்த ஜிப்ரான் பாடல்கள் பலருக்கு ஃபெவ்வரேட் பாடல்களாக இருக்கும். அறம், உத்தமவில்லன், டாணாகாரன், தூங்கா வனம், வத்திக்குச்சி, வலிமை,துணிவு, ராட்சஷன், தீரன் அதிகாரம் ஒன்று, பாபநாசம், வாகை சூடவா, போன்ற பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். பல விஒருது பரிசுகளை பெற்றிருந்தாலும் இவர் ரசிகர்களால் கொண்டாடப்படாமல் போவது சற்று வருத்தம் தான். Vijay Antony 25: விஜய் ஆண்டனியின் 25 வது படத்தின் தலைப்பு 'சக்தித் திருமகன்'.. அசத்தல் பர்ஸ்ட் லுக் உள்ளே.!
ஷான் ரோல்டன் (Sean Roldan):
இவரின் பாடல்களில் ஒன்றாவது தினமும் முனுங்காமல் இருப்பதில்லை. வாயை மூடி பேசவும், சதுரங்க வேட்டை, முண்டாசுப்பட்டி, ப பாண்டி, விஐபி 2, மெஹந்தி சர்கஸ், தாரளபிரபு, நெருப்புடா, ஜெய் பீம், சமீபத்தில் வெளிவந்த குட் நைட், மார்டன் லவ் சென்னை, போன்ற படம் மற்றும் வெப் சீரிஸ்களிலும் இசையமைத்துள்ளார். மேலும் பிற இசையமைப்பாளர்களின் இசையில் பல பாடல்கலை பாடி ஹிட் அடித்துள்ளார்.
கோவிந்த் வசந்தா (Govind Vasantha):
96 படத்தின் பாடல்கள் மூலம் தான் அனைவருக்கும் இவர் பரிட்சயமானார். ஆனால் இவரின் பல பிஜிம் போன் ரிங்டோனாக னிறைய பேர் வைத்திருக்கிறார்கள். சோலோ, 96, அசுரவிதம், சேதகாதி, உரியடி 2, தம்பி, பொன்மகல் வந்தால், புத்தம் புது காலை, ஒரு பக்கா கதை, துக்ளக் தர்பார், நவரசா, ஹெ சினமிகா, கார்கி போன்ற பல படங்கலுக்கு இசையமைத்துள்ளார்.
இசைத்துறையில் பாடல்களை விரும்பும் அளவு அதை இயக்கியவர்களை கொண்டாடுவதில்லை. ஜேன்ஸ் வசந்தன், பிரேம்ஜி, தரன் குமார், நிவாஸ் கே. பிரசன்னா, ஷாம் சி. எஸ், விவேக் மெர்வின் போன்றவர்கள் அண்டர்ரேட்டடில் இருக்கின்றனர்.
(The above story first appeared on LatestLY on Jan 29, 2025 12:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

