AR Rahman's Bassit Mohini Dey Divorce: ஏ.ஆர். ரஹ்மானிடம் வேலை பார்க்கும் மோகினி டே விவாகரத்து.. அதே நாளில் போடப்பட்ட பதிவு..!

பாசிஸ்ட் அமைப்பாளராக பிரபலமடைந்த மோகினி டே கணவர் மார்க் என்பவரை பிரிந்து விட்டதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.

Mohini Dey (Photo Credit: Facebook)

நவம்பர் 20, மும்பை (Cinema News): உலகமே கொண்டாடும் இசையமைப்பாளர் ஆஸ்கர் வென்ற ஏ ஆர் ரஹ்மான் (AR Rahman). எல்லா புகழும் இறைவனுக்கே என்று சொல்லக் கூடியவர். இவர் 1995ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி சாய்ரா பானு என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு கதீஜா, ரஹிமா என்ற 2 மகள்களும், அமீன் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை விட்டு பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு விவாகரத்து: இதுகுறித்து சாய்ரா தரப்பில் இருந்து வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் (AR Rahman Divorce), திருமணமாகி பல வருடங்களுக்குப் பிறகு, கணவர் ஏ.ஆர். ரஹ்மானை விட்டுப் பிரிவதற்கான கடினமான முடிவை எடுத்துள்ளேன். உறவில் ஏற்பட்ட உணர்ச்சிப்பூர்வ முறிவுகளுக்கு பின் எடுக்கப்பட்ட முடிவு இது. ஒருவருக்கொருவர் ஆழமான அன்பைத் தொடர்ந்து வந்த போதிலும், சில முரண்பாடுகள் தங்களுக்கு இடையேயான ஒரு தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கிவிட்டன. இந்த முரண்களை சரி செய்து இணைப்பை உருவாக்குவதற்கான முயற்சியில் இருவரும் தோல்வி அடைந்துவிட்டதாக உணர்கிறோம் என்று கூறப்பட்டது. Keerthi Suresh Wedding: கீர்த்தி சுரேஷுக்கு டும் டும் டும்.. 15 வருட காதலுடன் திருமணமா?!

மனைவி சாய்ரா பானு விவாகரத்து அறிவிப்பை தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கத்தை பதிவு செய்துள்ளார். அதில், “தங்கள் திருமணம் வாழ்வு 30 வயதை எட்டும் என்று நம்பினோம். ஆனால் எல்லாமே கண்ணுக்குத் தெரியாத முடிவாக தெரிகிறது. கடவுளின் சிம்மாசனம் கூட உடைந்த இதயங்களின் கனத்தால் நடுங்கக்கூடும். இதய சிதைவுகள் மீண்டும் தங்கள் இடத்தை கண்டுபிடிக்கவில்லை என்றாலும், அர்த்தத்தைக் தேடுவதாக தெரிவித்துள்ளார். மேலும், உடைந்தவை மீண்டும் சேராது. இந்த இக்கட்டான சமயத்திலும் உங்கள் அன்பிற்கும், எங்கள் தனியுரிமையை மதித்ததற்கும் நன்றி” என்று பதிவிட்டு இருந்தார்.

மோகினி டே விவாகரத்து: இந்த நிலையில் நேற்று சாய்ரா பதிவு வெளியிடுவதற்கு முன்பே ஏ.ஆர் ரகுமானிடம் வேலை பார்க்கும் மோகினி டே (Bassit Mohini Dey) என்பவரும் தன் விவாகரத்து செய்தியை அறிவித்து இருக்கிறார். மோகினி டேய் பாசிஸ்ட் இசையமைப்பாளராக சமூக வலைத்தளத்தில் செம ஆக்டிவாக இருக்கிறார். இந்த நிலையில் அவர் நேற்று தன்னுடைய கணவரை பிரிவதை குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு வெளியிட்டு இருக்கிறார்.

அதில், "கனத்த இதயத்துடன், மார்க் மற்றும் நானும் பிரிந்துவிட்டோம் என்பதை அறிவிக்கிறோம். முதலில் எங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு சொல்ல விரும்புகிறேன். நாங்கள் இருவரும் பேசி பரஸ்பரமாக இந்த முடிவு எடுத்திருக்கிறோம். MaMoGi மற்றும் Mohini Dey குழுக்கள் உட்பட பல திட்டங்களில் நாங்கள் இன்னும் இணைந்து செயல்படுவோம். நாங்கள் எப்போதும் ஒன்றாக இணைந்து பணியாற்றுவதில் பெருமை கொள்கிறோம், அது எந்த நேரத்திலும் நிறுத்தப்படாது. இந்த இக்கட்டான சமயத்திலும் உங்கள் அன்பிற்கும், எங்கள் தனியுரிமையை மதித்ததற்கும் நன்றி” என்று பதிவிட்டு இருந்தார்.

மோகினி டே விவாகரத்து:

 

View this post on Instagram

 

A post shared by Mohini Dey (@dey_bass)



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif