Music composer Praveen Kumar Passes Away: இளம் இசை அமைப்பாளர் பிரவீன் குமார் திடீர் மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!
மேதகு படத்தின் இசையமைப்பாளர் பிரவீன் குமார் மரணமடைந்துள்ளார்.
மே 02, சென்னை (Cinema News): 2021 ஆம் ஆண்டு தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட வீரர் பிரபாகரனின் வாழ்க்கை மையமாக வைத்து வெளிவந்த படம் தான் மேதகு. இப்படத்திற்கு இசையமைத்து அறிமுகமானவர்தான் பிரவீன் குமார் (Music composer Praveen Kumar). இவர் இரக்கதன் என்கிற படத்திற்கும் இசையமைத்துள்ளார். இவரது தனித்துவமான இசையால் இவர் தமிழ் சினிமாவில் கண்டிப்பாக பெரிய இடத்திற்கு செல்வார் என்று பலரால் பாராட்டப் பெற்றார். India's T20 World Cup Squad: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்க்கான இந்திய அணி.. நடராஜன் இருந்திருக்க வேண்டும்.. சுப்பிரமணியம் பத்ரிநாத்தின் விமர்சனம்..!
இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே பிரவீன் குமார் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். தொடர்ந்து இன்று அதிகாலை 6 மணி அளவில் அவர் மரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவரின் வயது வெறும் 28 மட்டுமே. இவரது திடீர் மரணம் தமிழ் திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தொடர்ந்து ரசிகர்களும் தமிழ் திரைத்துறையினரும் பிரவீன் குமாருக்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
(The above story first appeared on LatestLY on May 02, 2024 01:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

